Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அண்ணனுக்கு நிதி சேர்த்த அன்புத் தங்கை!

கனடா நாட்டில் டொரன்டோவில் வசிக்கும் சிறுவன் நடாவ். 7 வயதான இவன், ஒரு அரிய வகையான மரபணு சம்பந்தப்பட்ட நரம்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இந்த நோய் உள்ளவர்களால் சாதாரணமாக நடக்கவோ, பேசவோ இயலாது. அது மட்டுமின்றி நடாவ்விற்கு வலிப்பும் கூட அடிக்கடி வந்து போகுமாம்.

அங்கிள்மென் சின்ட்ரோம் ( Angelman syndrome ) என்ற அந்த நோய்க்காக இப்போது தீவிர சிகிச்சையில் இருக்கும் நடாவ்விற்கு, அதற்காக அளவுக்கு மீறிய செலவு ஆகிறது. ஒரு கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் தகுதிக்கு மீறி செலவிட முடியாமல் ஒதுங்கிவிட்டனர்.

ஆனால் நடாவ்வின் சகோதரி நமா உசன் அண்ணனின் நிலை கண்டு மனம் வருந்தினாள். எப்பாடுபட்டாவது அண்ணனை காப்பாற்றியே தீர வேண்டும் என முடிவெடுத்தாள். அதற்காக தனது பள்ளி நேரம் போகமற்ற நேரங்களை பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தாள்.

ஐந்தே வயதான நமா உசன், தன் ஏழுவயதுள்ள சகோதரனுக்காக மாலை  நேரங்களில் சிறுசிறு உணவுப் பொருட்களை விற்று அதன் மூலம் அண்ணனின் மருத்துவச் செலவுக்கு நிதி திரட்ட முடிவெடுத்தாள். லெமனைட், பஸ்ட்ரீஸ் மற்றும் மஃபின்கள் (லெமன் ஜீஸ் உடன் சோடா, நம்ம ஊர் கேக் மாதிரியான தின்பண்டம்) போன்றவை அங்கு பிரபலமானவை என்பதால் அவற்றை தயாரித்து விற்று, அதன் மூலம் இதுவரை 25,000 டாலர் வரை நிதி திரட்டி இருக்கிறாள்.

பல வாடிக்கையாளர்கள் மிகச் சிறுவயதில் அவள் தொழிலில் ஈடுபடுவதை கண்டிப்பர். அவர்களிடம் நமா உசன், தன் கதையைச் சொல்லி வருந்துவாள். பரிதாபப்பட்ட அவர்கள் அன்று முதல் அவளுக்கு நிரந்தர வாடிக்கையாளராகிவிடுவர். நமா-உசனின் இந்த நல்ல உள்ளத்தை யாராவது பாராட்டினால், என் சகோதரனின் அங்கிள்மேன் சின்ட்ரோமை குணப்படுத்ததான் நிதி திரட்டுகிறேன்.இதில் பாராட்ட என்ன இருக்கிறது என்று பெரிய வார்த்தைகளை சொல்லி கண்கலங்க வைக்கிறார்.

நமா-உசனின் நல்ல உள்ளத்தை நினைத்து பெருமைப்படுவதா, இல்லை அங்கிள்மேன் சின்ட்ரோமின் கொடூ ரத்தை நினைத்து கலங்குவதா என்று தெரியாமல் விழிக்கிறார்கள் அவர்கள்.

- எம்.ஜெ. கௌதம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ