Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏன் இந்த நிலைமை?!

ஐந்து வயது யோகிதா (34 கிலோ), மூன்று வயது அனீஷா (48 கிலோ), பதினெட்டு மாத ஹர்ஷ் (15 கிலோ)... இவர்கள் மூவரும்தான் இந்தியாவில் மிகவும் அதிக எடை உள்ள குழந்தைகள் என்று கணக்கிடப்பட்டுள்ளார்கள்.

குஜராத்தை சேர்ந்த ரமேஷ்பாய் நந்த்வானா, பிரக்னாவின் குழந்தைகளான இவர்களின் டெய்லி மெனுவை கேட்டால் நமக்கு பரிதாபமாக/மயக்கமாகவும் வருகிறது.

இதுதான் இந்த மூன்று குழந்தைகளின் டெய்லி சாப்பாட்டு மெனு

காலை 6 மணி: ஐந்து வாழைப்பழம், ஒரு லிட்டர் பால், கோதுமை சப்பாத்தி 6, ஒரு கப் வெஜிடபிள்ஸ்

10 மணி: ஐந்து சப்பாத்தி, ஒரு கப் தயிர், ஒரு கப் வேக வைத்த காய்கறிகள்

12.30 மணி: சிறுதானிய சப்பாத்தி, இரண்டு வாழைப்பழம்,  4 பாக்கெட் கடைகளில் கிடைக்கும் சிப்ஸ்

3 மணி: சிறுதானிய பிரெட், அரிசி, 3 கப் வேக வைத்த காய்கறிகள்

5 மணி: ஒரு லிட்டர் பெப்சி/கோக், 5 பாக்கெட் சிப்ஸ், 5 பாக்கெட் பிஸ்கெட்ஸ், ஐந்து வாழைப்பழம்

8 மணி: 6 சப்பாத்தி, ஒரு லிட்டர் பால், மோர் ஒன்னரை லிட்டர், இரண்டு பெரிய கப்பில் வேக வைத்த காய்கறிகள்

''என் குழந்தைகள் இதே நிலைமையில் வளர்ந்தால் நிச்சயம் உடல்ரீதியான பல துன்பங்களை சந்திப்பார்கள் என்கிற பயம் இருக்கிறது. என் கணவர் வேலைக்கு போய்விட்ட பிறகு சமையல்கட்டிலேயேதான் நான் அடைந்து கிடக்க வேண்டியது இருக்கிறது. என் குழந்தைகளின் பசியாற்ற தொடர்ந்து சமைத்து கொண்டே இருக்கிறேன். மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்வார்கள். பார்க்க பாவமாக இருக்கும்.

என்னால் தனியாளாக அவர்களை குளிக்க கூட தூக்க முடியாது. உருண்டு உருண்டு அவர்களாக குளியல் இடத்திற்கு வருவார்கள். டாய்லெட் போன்ற சமாச்சாரங்களுக்கு கூட அவர்களால் தனியாக எதையும் செய்ய முடியாது" என்று கண்ணீர் வடிக்கிறார் அவரது அம்மா பிரக்னா.

''கிடைக்கிற வேலைகளை செய்யும் எனக்கு மாத சம்பளமே 3000 ரூபாய்தான். ஆனால், அவர்களுக்கு மாதத்திற்கு 10,000 ரூபாய் உணவுக்கு மட்டுமே செலவாகிறது. மிகப்பெரிய ஆஸ்பத்திரியில் மட்டுமே அவர்களுக்கான சிகிச்சை அளிக்க முன்வருகிறார்கள். ஆனால், அதற்கான பணம் என்னிடம் இல்லை. பல பேரிடம் கடன் வாங்கிதான் என் குழந்தைகளுக்கு பசியாற்றி வருகிறேன். இனி என் கிட்னியை விற்க முடிவு செய்திருக்கிறேன். அதை விற்றாவது என் குழந்தைகளின் பசியை சிறிது காலம் ஆற்றலாம் என முடிவு செய்திருக்கிறேன்" என்கிற அவரது பேட்டி நமக்கு அதிர்ச்சியை கொடுக்கிறது.

- அதிதி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close