Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பூனைக்கு வந்த வாழ்வு!

ழகிகள் பூனை நடை நடப்பது நமக்கு தெரிந்த விஷயம். ஆனால் இங்கே ஒரு பூனையே ’பூனைநடை’ நடக்கிறது என்றால் அது ஆச்சரியம் தானே.

ஜெர்மன் நாட்டு பேஷன் டிசைனர் கர்ல் லேஜர்பெல்டு, ஒரு பூனைக்குட்டியை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அதன் பெயர் சாவ்பெட். அந்த பூனையை விளம்பரப் படங்களில் நடிக்க வைத்து வருகிறார். அழகு சாதன பொருட்கள் மற்றும் கார் கம்பெனிகளின் படங்களில் அந்த பூனை நடித்துள்ளது. அதன்மூலம் கடந்த ஆண்டு மட்டும் ரூ.26 கோடி சம்பாதித்து சாதனை படைத்துள்ளது.

நீல நிற கண்களுடன் கேலண்டர்களில் போஸ் கொடுக்கும் இந்த சாவ்பெட்டுக்கு தனியாக ‘இன்ஸ்டாக்ராம்’ கணக்கு உள்ளது.  கூடவே இரண்டு வேலைக்காரப் பெண்களும் உள்ளனர். அதற்கு மற்ற பிராணிகளையோ, குழந்தைகளையோ பிடிக்காது. உயர்தர நிறுவனங்களுக்கு மாடலாக இருப்பதற்கே ஆசைப்படுகிறதாம். ட்விட்டரில் 1 லட்சம் ஃபாலோயர்ஸ்களை கொண்ட இந்த பூனைக்கு உயர்தர மாமிசமும், மீன் வகைகளும், குடிப்பதற்கு மினரல் வாட்டரும் தான் வேண்டுமாம்.

ஹும்... 'யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்’னு சும்மாவா சொன்னாங்க!

- பொன்.விமலா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ