Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நூடுல்ஸ் விற்ற காசில் பிஎம்டபிள்யூ!

‘நட்புக்காக’ என்றொரு படத்தில் சரத்குமாரும், விஜயகுமாரும் ஃபோர்டு ஷோ ரூமுக்குச் சென்று, மூட்டை நிறையப் பணத்தைத் தரையில் வாரி இறைத்து, ‘இது எள்ளு வித்த காசு... 8 லட்சத்தை எடுத்துக்கிட்டு மிச்சம் 2 லட்சத்தை கோணியில கட்டு!’ என்று கார் ஷோரூம் மேனேஜரிடம் அலப்பறை செய்து ஃபோர்டு எஸ்கார்ட் கார் வாங்குவார்களே... அதே ஸ்டைலில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார் சீனாவைச் சேர்ந்த ஓர் அம்மணி.

‘இது நூடுல்ஸ் வித்த காசு’ என்று பார்ட் பேமென்ட்டாக ஒரு லட்சம் யுனான் பணத்தை, ஒரு மினி ட்ரக்கில் கொண்டு வந்து இறக்கினாராம் அந்த அம்மணி. சீனாவில் ப்ளாட்ஃபார்ம் நூடுல்ஸ் ஹோட்டல் நடத்திவரும் அவர், ரொம்ப நாட்களாகச் சேர்த்து வைத்த சில்லறைப் பணத்தைக் கொண்டு பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் ஒன்றை புக் செய்திருக்கிறார்.

சீனாவின் ஹெனான் மாநிலத்தின் தலைநகரான ஜென்ஸ்ஜ்ஹூ என்ற நகரில் அமைந்துள்ள பிஎம்டபிள்யூ ஷோரூமில், இந்தச் சில்லறைப் பணத்தை எண்ணுவதற்காக 20 ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட சோறு தண்ணியில்லாமல் தொடர்ந்து ஆறு மணி நேரம் பணத்தை எண்ணியிருக்கிறார்களாம் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்கள்.

‘‘காலையில் 9.30 மணிக்கு இந்த ஒரு லட்சம் யுயான்களை எண்ண ஆரம்பித்தோம். மாலை 3.30 மணிக்குத்தான் மொத்தப் பணத்தையும் எண்ணி முடித்தோம். மக்கள் சில்லறைப் பணத்தைச் சேர்த்து வைத்துப் பொருள் வாங்குவதை நியூஸில் படித்திருக்கிறேன். ஆனால், அது எனக்கே சோதனையாய் வந்து அமையும் என்று நினைக்கவில்லை!’’ என்று பணம் எண்ணிய களைப்பு விலகாமல் சொல்கிறார், இந்த கார் ஷோரூமின் மேனேஜரான லீ மாரன்.

சிறு துளி - பெரிய பிஎம்டபிள்யூ!

- தமிழ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close