Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாள் வீசும் சிறுமி!

சிறுமிகள் என்றாலே, தன் தோழிகளுடன் விளையாடுவார்கள், படிப்பார்கள், வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவியாக இருப்பார்கள். ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த ஜெஸ்சி ஜானே மெக்பர்லாண்ட் (Jesse Jane McParland) என்பவர், தன் வயது மாணவர்கள் எல்லோரும் விளையாட்டில் மூழ்கியிருக்க, இவள் மட்டும் வாள் வீச்சில் சக்கைப்போடு போடுகிறாள்.

மார்ஷியல் கலையில் (Martial Arts) சாதனைகள் படைத்துவரும் ஜேஸ், கிக் பாக்ஸிங் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றிருப்பதோடு, இதுவரை 117 மார்ஷியல் ஆர்ட் டைட்டில்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இவர், மார்ஷியல் ஆர்ட் கிட் வேடத்தில் நடித்துள்ள முதல் திரைப்படம் 'த டிராகன்' விரைவில் வெளிவர உள்ளது. ஜூலையில் இன்னொரு படத்தில் நடிக்கவும் கால்ஷிட் தந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற 'பிரிட்டன் காட் டேலென்ட்' போட்டியில், தன் வாள் வீச்சுத் திறமையைக் காட்டி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார் ஜெஸ்சி.

ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்குவதே இந்த ஒன்பது வயது வொண்டர் கிட்டின் லட்சியமாம். தன் மூன்று வயது முதலே மார்ஷியல் கலையில் பயிற்சி எடுத்து வருகிறார்.

- என்.மல்லிகார்ஜுனா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ