Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

103 வயதில் பள்ளிப்படிப்பு: அமெரிக்காவில் ஒரு அதிசய மாணவி!

‘பெட்டர் லேட் தன் நெவர்’ என்பார்கள். பாதியில் நின்றுபோன தன் பள்ளிப்படிப்பை, 103 வயதில் முடித்து பட்டம் வாங்கிச் சிரிக்கிறார், அமெரிக்காவைச் சேர்ந்த மேரி ஹன்ட் பாட்டி.

அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரின் அருகே உள்ள ஸ்பிரிங் க்ரீன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மேரி. தினமும் விஸ்கான்சினில் உள்ள பள்ளிக்குச் சென்று வர முடியாத காரணத்தால், எட்டாவது கிரேடுடன் தடைபட்டுப் போனது மேரியின் படிப்பு. ஆனாலும், அவரின் ஏழு சகோதரி, சகோதரிகளைப் படிக்க வைக்க தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். வயது ஆகிக்கொண்டே இருந்தாலும் மேரியின் பள்ளி ஆசை மட்டும் அவரிடமிருந்து விலகவே இல்லை.

இப்போது 103 வயதில் அந்த ஆசையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார் மேரி. சின்னஞ்சிறு வயது மாணவிகளுடன் அவர் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்தது அவருக்கு வேண்டுமானால் ஆசையாக இருந்திருக்கலாம். சக மாணவிகளுக்கு சற்று கூச்சமாக இருந்திருக்கக்கூடும். ஆனால் எதைப்பற்றியும் கவலையின்றி பட்டம் பெற்றிருக்கிறார்.

‘‘1928ல் நான் கிராஜுவேஷன் வாங்கியிருக்க வேண்டியது. எப்போதுமே அந்த ஏக்கம் இருந்து கொண்டே இருக் கும். ஆனால், என் 100 வயதில் அந்த ஏக்கம் தீர்மானமாக மாறியது, எனக்கே ஆச்சர்யம்தான். நான் படித்த ‘ரிவர் வேலி’ பள்ளியை கூச்சத்துடன் அணுகியபோது, சந்தோஷமாகி உற்சாகப்படுத்தினார்கள். என்னை கவனித்துக் கொள்ளும் செவிலியர், நான் படிக்க உதவினார்.

கிட்டத்தட்ட 87 வருடங்கள் கழித்து, விட்டுப்போன என் பள்ளிப் படிப்பை முடித்து நான் பட்டம் வாங்கியிருக்கிறேன். கல்விக்கு வயது எல்லையல்ல என்பது, என் மூலம் நிரூபணமாகி இருப்பது குறித்து மகிழ்ச்சி!’’ - கன்னச் சுருக்கங்கள் பெருகச் சிரிக்கிறார் மேரி ஹன்ட் பாட்டி!

- இனியா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close