Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6 பேக்? நோ, நோ........ DadBod தான் இப்ப ஹாட்டு!

6 பேக்தான் ஹிட் பேக்னு பல பசங்க ஜிம்மே கதியா இருக்காங்க. சில பசங்க ஜிம்முக்கு போகணும்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. ஆனா, போகாம இருக் கிறதுக்கு மட்டும் ஆயிரம் காரணம் சொல்லுவாங்க.

இன்னொரு டைப் பசங்க, எப்பயாவது ஜிம்முக்கு போயிட்டு அப்படியே விட் ருவாங்க. சில பசங்களுக்கு ஏரியாவுல ஜிம் இருக்கிறதையே யாராவது சொன்னாதான் தெரியும்.

ஆனா, சில பசங்க கொடுத்துவைச்சவங்க. ஜிம்முக்குப் போறது கிடையாது. சாப்பாடும் அப்பப்போ நிறைய சாப்பிடுவாங்க. ஆனா, உடம்பு குண்டாவும் இல்லாம, ஒல்லியாவும் இல்லாம எப்படியோ பார்க்க நார்மலா இருக்கும். இவங்களுக்கு இருக்க உடம்புக்கு பேர்தான் 'DadBod'. அட... நம்ம ஊர் கல்யாணத் தொப்பை மாதிரி உடம்பைத்தான் இப்ப இப்படி சொல்றாங்க...!

மௌன ராகம் படத்தில் மோகனுக்குகூட Dadbodதான். ரோஜா படத்தில் அரவிந்த் சாமிக்கு இருப்பதும் DadBod-தான். ஜெயம் ரவியும் ஒரு நல்ல உதாரணம்.

இப்ப நெட்ல எங்க சுத்தினாலும், DadBod பத்திதான் ஒரே பேச்சு. இதுக்கெல்லாம் யார் காரணம்னு பார்த்தா அமெரிக்காவில் உள்ள கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படிக்கும் மெக்கென்ஸி பியர்சன் (Mackenzie Pearson) என்ற பொண்ணு எழுதின ஒரு கட்டுரைதான்.

'எல்லா பொண்ணுங்களுக்கும் 6 பேக்தான் பிடிக்கும்ணு யாரு பாஸ் சொன்னா?... DadBod ஸ்டைல்தான்பா சூப்பர். ஜிம்முக்கு போய் உடம்பை ஷேப்பா வச்சுக்கிறதெல்லாம் நல்லதுதான். ஆனா, ஒரு மனுஷன் இயல்பா, இயற்கையான உடல்வாகுடன் இருக்கிறதுதான் அழகு.

அந்த மனுஷனுக்கு தான் யார்னு தெரியும். எப்பவும் எல்லாமும் பெர்ஃபெக்ட்டா இருக்கணும்னு அவன் நம்மளை பிரஷர் பண்ண மாட்டான். எல்லாத்துக்கும் மேல அவன் உடம்ப அவனுக்கு பிடிச்சிருக்கு... அத னால எங்களுக்கு அவன ரொம்ப பிடிச்சிருக்கு!' என்கிறார் மெக்கென்ஸி பியர்சன்.

மார்ச் 30-ம் தேதி, அமெரிக்காவின் The Odyssey பத்திரிகையில்தான் இப்படி எழுதியிருந் தார் மெக்கென்ஸி பியர்சன்.

எப்படியோ இந்த கட்டுரை கடந்த வாரம் திடீர்னு வைரல் ஆகி, இன்ஸ்டாகிராம் பக்கம் போனாலே மினி தொந்தியுடன் #DadBod ஹாஷ்டேக்குடன் ஆயிரக்கணக்கான படங் களை போஸ்ட் பண்ணிக்கொண்டிருந்தார்கள் நெட்டிசன்கள். "DadBod வார்த்தையை நான் கண்டுபிடிக்கல. அந்த டைப் உடம்பு இருக்கிற பசங்கள.. பொண்ணுங்க இப்படித் தான் சீக்ரெட் கோட்ல சொல்லுவாங்க...!' என்கிறார் மெக்கென்ஸி.

நோட் திஸ் பாயின்ட் பாய்ஸ், 6 பேக் சிங்கங்கள் எல்லாம் இனிமே நல்லா சாப்பிட்டா மட்டும்போதும்!

ஜிம்முக்கு போகாம இருக்கிற பாய்ஸ்....'நீங்க சும்மா இருந்தா மட்டும் போதும்!'

- ர. ராஜா ராமமூர்த்தி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ