Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

+2 ரிசல்ட் இப்படி கூட வரலாமே!

ன்று காலை, டைம்பாஸ் ஃபேஸ்புக் பக்கத்தில், இதுவரை +2 ரிசல்ட்டை எந்த விதத்தில் எல்லாம் பார்த்திருக்கிறோம். அதனை அடுத்த தலைமுறை எப்படி பார்க்கப்போகிறது என்ற மாதிரியான ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தோம். அதற்கு வாசகர்கள் அளித்த ரியாக்‌ஷன்கள் நகைச்சுவையாக மட்டுமில்லாமல், அரசுக்கு ஆலோசனை வழங்குபவையாகவும் இருந்தன. அவற்றில் சுவாரஸ்யமான 5 கமெண்டுகள் இதோ...

1. இணையதள முகவரியை பதிவு செய்து வைத்திருந்தால் நாம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, டிக்கெட் இ-மெயிலாக நமக்கு வந்து சேருவது போல, ரிசல்ட் இ-மெயிலாக வரலாம் என்று கூறியுள்ளார்.

2. அனைத்து மாணவர்களது போன் நம்பரையும் தேர்வு எண்ணோடு இணைத்து விட்டால் ரிசல்ட் எஸ்.எம்.எஸ். மூலமாக உங்கள் மொபைல் எண்ணுக்கு வரலாம் என்று கூறியுள்ளார்.

3. ஃபேஸ்புக் கணக்கில் நோட்டிஃபிகேஷனாக வரலாம், அல்லது வாட்ஸ் அப் நம்பருக்கு மெஸேஜாக வரலாம் என்று கூறினர்.

4. இனி தேர்வு முறை நேரடியாக இருக்காமல், ஆன்லைனாக இருக்கும். அப்படி நடக்கும் போது உடனடியாக கணினி திரையிலேயே ரிசல்ட்தோன்றிவிடும்.

5. விர்ச்சுவல் டிஸ்ப்ளே எனும் தொழில்நுட்பத்தில் ஒளியை திரையில் பிடித்து பார்க்கும் சிக்ஸ்த் சென்ஸ் தொழில்நுட்பத்தில் பார்க்கலாம்.

இது தவிர சிலர் தேர்வே இருக்காது, தேர்வு எழுதிய உடனேயே திருத்தி கூறி விடுவார்கள் என நகைச்சுவையான பதிவுகளையும் பதிவு செய்திருந்தனர்.

சில கருத்துகள் சாத்தியமில்லை என்றாலும், எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் போன்ற முறைகள் சாத்தியமாக தான் தெரிந்தன. ஒருவேளை அரசு இந்த முறைகளில் ஏதேனும் ஒன்றை அறிமுகம் செய்தால், நான் பாஸாகிவிட்டேன் என்ற விஷயத்தை விரல்நுனியில் பார்க்க முடியும் என்பதில் ஆச்சர்யமில்லை.

எடிட்டர் சாய்ஸ்