Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்வி நிதிக்காக கலக்கல் சைக்கிளிங்!

மும்பையில் இருக்கும் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் நிறுவனத்தில் முதுகலைப் படிக்கும் கவின் கோகுல், சஞ்சு ஆகிய இரண்டு மாணவர்கள், மும்பை முதல் பெங்களூரு வரை சுமார் 1,000 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்து, கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்விக்காக நிதி திரட்டியுள்ளனர். கடந்த ஏப்ரல் 25 அன்று துவங்கிய தங்களின் பயணத்தை, மே 3 அன்று பெங்களூருவில் முடித்துள்ளனர்.

இதில் கவினுக்கு சொந்த ஊர் தமிழகத்தின் செங்கல்பட்டு. இவருடைய அப்பா அன்பழகன் சி.பி.ஐ.-யில் பணியாற்றுகிறார். அம்மா சுஜாதா, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை. சஞ்சு, கேரளா மாநிலம், பந்தனம்திட்டா மாவட்டம், அடூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய அப்பா ரப்பர் விவசாயி. அம்மா குடும்பத்தலைவி.
 
''சிறு வயது முதலே எனக்கு சைக்கிளிங்கில் இன்ட்ரஸ்ட் உண்டு. கடந்த இரண்டு வருடங்களாக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டியும், சுற்றுப்புறத்தை பாதுக்காக்க வேண்டியும் எங்கள் இன்ஸ்டிடியூட்டில் சைக்கிளிங் செய்கிறேன். அப்போதுதான் நண்பர் சஞ்சு, 'சைக்கிளிங் மூலமாக எதையாவது வித்தியாசமாக சாதிக்க வேண்டும்' என்று என்னை திசை திருப்பினார். 'நமக்கு புது அனுபவமாகவும், அதன்மூலமாக மற்றவர்களுக்கு உதவியும் கிடைக்க என்ன செய்யலாம்' என்று இருவரும் யோசித்தபொழுதுதான் இந்த ஐடியா தோன்றியது'' என்று கவின் சொல்ல, அவரைத் தொடர்ந்த சஞ்சு,

''மும்பை முதல் பெங்களூரு வரையிலான சுமார் 1,000 கிலோ மீட்டர் தூரத்தை 8 நாட்களில் கடந்தோம். பகல் முழுவதும் சைக்கிளில் பயணம் செய்தோம். இரவுகளில் கோயில், பெட்ரோல் பங்க் என்று கிடைத்த இடத்தில் தங்கிக் கொண்டோம். ஒரு நாளைக்கு சுமார் 120 முதல் 130 கிலோ மீட்டர் வரை கடந்தோம். வழியில் ஏராளமான மனிதர்களை சந்தித்தோம். அவர்களுடனான உரையாடல்கள், அனுபவங்கள் என்று ஒவ்வொரு நாளும் சுவரஸ்யமாகச் சென்றது. எங்களின் முயற்சி மூலமாக ஒன்றிரண்டு கிராமப்புற மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைத்தாலே... அது எங்களுக்குக் கிடைத்த வெற்றிதானே!'' என்று பெருமையோடு சொன்னார்.

- யதி

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ