Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

10 மாணவிகள் தற்கொலை - இது பகிரங்க போர் அல்லவா?

பிளஸ் 2  தேர்வு முடிவுகள்  வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 10 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.  தேர்வு முடிவுகள் வெளியாகி  முதல் மூன்று இடங்களையும் பிடித்த மாணவர்களின் படங்கள் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, தேர்வு முடிவுகளைப் போல தற்கொலை முடிவுகள் வரிசையாக வெளிவரத் துவங்கின.

ஈரோட்டை சேர்ந்த காளிதாஸ் என்ற நெசவுத் தொழிலாளியின் மகள் மஞ்சுளா, தேர்வில் வெற்றி பெற்றிருந்தும் மதிப்பெண் குறைந்து விட்டதே என தீக்குளித்து இறந்திருக்கிறார். 

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகன் ரகு, தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடியாத்தம் நாகராஜ் மகன் குணசேகரன், சென்னை செம்மஞ்சேரியில் வசிக்கும் கரிகாலன் மகள் இலக்கியா, மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை. தேனி, கண்டமனூர் அன்னக்கொடி மகன் அஜய்யோ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே  தோற்று விடுவோமோ என்ற அச்சத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோபிசெட்டிப்பாளையம்  மாரிமுத்து என்பவரின் மகள் ஆனந்தி,  தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வால்பாறை  பச்சைமலை எஸ்டேட் பகுதி மாணவி கலா  தூக்கிட்டுக் கொண்டிருக்கிறார்.

விழுப்புரம், தோகைப்பாடி காலனி முருகன் மகள் தேவதர்ஷினி, கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு சில மணி  நேரங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை. இப்படி விரிந்து வேதனையாக நினைவுகளாகச் செல்கிறது இளம் பள்ளிச் சிறுவர்களின் தற்கொலைகள்.

'தேர்வில் வென்றால் மட்டும் போதாது உயர் கல்விக்கு தகுதி பெறும் உயர்ந்த மதிப்பெண் பெற்றாக வேண்டும்...!'  என்ற அழுத்தம் மாணவர்கள் மீது சுமத்தப்படுகிறது. சென்ற தலைமுறை வரை தேர்வில் வெற்றி என்பதே பெரிய விஷயமாகப் பேசப்பட்டு வந்தது. அப்போது கூட இந்த அளவு தற்கொலை நிகழ்ந்ததில்லை. பள்ளி வாழ்க்கை, மதிப்பெண்களுக்கு அப்பால் தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்ட தலைமுறை அது. ஆனால், இந்த தலைமுறை சிறுவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க மறுத்து விட்டது நமது சமூக அமைப்பு.

'வெற்றி பெறுவதல்ல. அதிகம் மதிப்பெண் பெற வேண்டும்., போட்டியில் நீ இருக்க வேண்டும் என்றால் படித்துக் கொண்டே இருக்க வேண்டும், மனப்பாடம் செய்து மதிப்பெண்களை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்!' என போதிக்கிறது நமது புதிய கல்வி மரபு. உண்மையில் பள்ளிக்கூடங்களின் நோக்கம்தான் என்ன?

மதிப்பெண் பெறுவது. 100% சதவீத தேர்ச்சி விகிதத்தை காட்டி, மேலும் மேலும் கல்விப் போட்டியில் தங்கள் பள்ளியை முதன்மைப் பள்ளியாக மாற்றுவது என்ற பிராய்லர் பள்ளி தேர்வு முறைகளே இந்தக் தற்கொலைகளுக்கு காரணம். நமது கல்வி முறை கடுமையாக பிளவுபட்டு நிற்கிறது. ஏழைகளுக்கு சேரிப் பள்ளிகளும், செல்வந்தவர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட பள்ளிகளுமாக கல்வித் திட்டங்களே வாழ்க்கை வசதிகளுக்கு ஏற்ப மாணவர் பருவத்தை பிளவுபடுத்தி விட்டது.

நாமக்கல், சேலம், தருமபுரி போன்ற  பகுதிகளிலும், தமிழகம் முழுக்க கடை விரித்திருக்கும் தனியார் பள்ளிகளும்  குறுக்கு வழியில் அதிக மதிப்பெண்களுக்காக மாணவர்களை துன்புறுத்துகின்றன. பிளஸ் டூ பாடத்தை 11-ம் வகுப்பிலே தொடங்கி நடத்துகின்றன. டியூஷன் செல்லவோ, பணம் செல்வழித்து படிக்கவோ வசதியற்ற மாணவர்கள் ஓராண்டு மட்டுமே படிக்கும் பாடத்தை, வசதியுள்ள மாணவர்கள் இரண்டு வருடம் படிக்கிறார்கள். டியூஷன் செல்கிறார்கள். இது போக  உள்ளூர் ஆசிரியர்களின் உதவியோடு நடக்கும் தேர்வுகளில்  கேள்வித்தாள்களும்  லீக் ஆகி,  மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.  இப்படி ஒரு கல்விமுறையை நடத்தி முதல்மதிப்பெண் கொண்டாட்டங்களை பெருமையாக கொண்டாட பள்ளிகள் தேவையில்லை. டியூட்டோரியல்களே போதுமானவை.

இதற்கிடையில் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை கைவிட்டு, 8-ம் வகுப்பிலேயே மாணவர்களை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் போடுகிறது தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு. இன்னொரு பக்கம், அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை கைவிட மத்திய அரசு தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம்  (ஆர்.டி.இ.) வழங்கியுள்ள உரிமையை இது இல்லாதொழிக்கிறது.

பள்ளிக்கூடங்களின் நோக்கம்

ஒரு குழந்தை  பிறப்பதன் அடிப்படை, அது குழந்தை பிராயத்தில் இருந்து வளரும் போது சமூக விலங்காக மாற வேண்டும். ஆமாம், சமூக மயமாதல் என்பது வெறுமனே பெற்றோரிடம் மட்டும் நடப்பதல்ல. பள்ளிக்கூடம் அதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், இன்றைய கல்வி முறை நமது இளம் தலைமுறையை சமூக மயமாக்குவதற்கு பதிலாக, சமூகத்தில் இருந்து மிக மோசமாக விலக்கி வைக்கிறது. பாரபட்சமாக அடித்துத் துரத்துகிறது. அதன் விளைவுகள்தான் இந்த தற்கொலைகள். ஒரு வகையில் இது தனியார் கல்விமுறை நடத்தும் கொலைகளே.

இந்த கல்வியாண்டில் 100 சதவிகிதத் தேர்ச்சி விகிதத்தை அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் இலக்காக நிர்ணயித்துள்ளது பள்ளிக் கல்வித் துறை. ஆனால் தனியார் பள்ளிகளை விட இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ளது அரசுப் பள்ளிகள். இது அரசும், பல விதமான பாரபட்சமான கல்விமுறையும் நமது ஏழைக் குழந்தைகள் மீது  நடத்தும் பகிரங்கமான போர் அல்லவா?

-டி.அருள் எழிலன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ