Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுச்சேரி அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம்!!!

 சுமார் 5.50 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 'புதுச்சேரி அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம்' , மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர்  சர்மாவால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது தேசிய அறிவியல் அருட்காட்சியக மன்றத்தால் வடிவமைக்கபட்டுள்ளது. இங்கு இரண்டு காட்சியரங்குகள், தானியங்கிய கணினிமய டிஜிட்டல் கோளரங்கம், அறிவியல் பூங்கா, அலுவலகம், என மொத்தம் 300 ஏக்கர் அளவில்இந்த அறிவியல் மையம் அமைக்கபட்டுள்ளது.

ஒவ்வொரு அறிவியல் மையத்திற்கும் ஒருதனி சிறப்பு உள்ளது. அதே போல் இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பே கடல்சார் உயிரினம் பல்லுயிர்கள் தொட்டில் அரங்கம் தான். கடல்சாரா உயிரினங்கள் பற்றி நாம் தெரிந்துகொள்ள இது பெரிதும் உதவிகிறது. இதில் கடற்சூழல், கடல் பல்லுயிரியாக்கம், கடல்வளங்கள், கடல் வளத்தின் அச்சுறுத்தல்கள்,கடல் சுற்றுலா போன்ற ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதுவும் “கடல் சுற்றுலா” என்ற தலைப்பில்  வைக்கப்பட்டுள்ள டால்பின், ஸ்டார் பிஷ், குட்டி குட்டி மீன்கள், கடல் ஆமை போன்றவை ஒரு நிமிடம் நாம் நிஜமாகவே ஆழ்கடலில் இருப்பது போல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.



இந்த அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் திங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களை தவிர தினமும் காலை 10 மணி முதல் 5:30 வரை செயல் படும். இதற்கான நுழைவு கட்டணம் அறிவியல் மையதிற்கு பெரியவர்களுக்கு 10 ரூபாய் (ஒரு நபருக்கு)  குழந்தைகளுக்கு ரூ. 5ம், வெளிநாட்டவருக்கு ரூபாய்.20 ம் வசூலிக்கபடுகிறது. அதேபோல் டிஜிட்டல் கோளரங்கத்திற்க்கான நுழைவு கட்டணம்  பெரியவர்களுக்கு 20ரூபாய் (ஒரு நபருக்கு) ரூபாய்.குழந்தைகளுக்கு ரூ. 10ம், வெளிநாட்டவருக்கு 40 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிமாணவர்களுக்கு இலவச நுழைவு . அதுபோல மாற்று திறனாளிகளுக்கு வருடம் ஒரு நபருக்கு இலவச அனுமதி என்றும் கூறியுள்ளனர்.

இதுபோல அறிவியல் மற்றும்  தொழில்நுட்ப பூங்காக்களை திறப்பதால் மக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை வருங்கால சந்ததியினரிடம் ஏற்படுத்த ஏதுவாக இருக்கும்.

-சு. கற்பகம் (மாணவர் பத்திரிகையாளர்)
படங்கள்: குருஸ் தனம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ