Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அம்மா என்றால் சும்மா இல்லை...

சாதரணமா ஒரு சிலையை செதுக்க ஒரு சிற்பி எவ்வளவு கஷ்ட்டப்படுவாரோ, அது போல பல மடங்கு கஷ்டப்பட்டு ஒரு குழந்தையை பத்து மாதம் சுமந்து அதை பெற்றெடுத்து பாலூட்டி தாலாட்டி வளர்த்து, அக்குழந்தையை ஒரு நல்ல மனிதனாக, செதுக்கி  இந்த உலகத்திற்குஅளிப்பது தாய் தான்.

கடவுள் கூட கடைசியில் தான் இருக்கிறார். அதாவது ”மாதா பிதா, குரு,பின்னர் தான் தெய்வம். நமக்கு முழுமுதல் தெய்வமாக இருப்பதே நம் தாய் தான். அப்படி பட்ட அம்மாவுக்கு கோவில் கட்டி கும்பிட்டாலும்கூட அது அம்மாவின் அன்புக்கு ஈடாகாது. `

இன்றும் கிராமத்தில், காலையில் சூரியன் உதிக்கும் முன்னரே எழுந்து, வாசல் தெளிச்சு, கோலம் போட்டு, சமைத்து , இடுப்பில் தன் குழந்தையை வைத்துக்கொண்டு , தன் கணவருக்கு சோறு   கொடுத்துவிட்டு, காலில் செருப்பு கூட இல்லாமல் வெயிலில் வாடியபடி வாழும் தாய்மார்களை காணமுடியும்.

மேலும் கணவருக்கு ஈடாக வேர்வை சிந்தி உழைத்து, பல்வேறு கூலிவேலைகள் செய்து பொழுது சாய்ந்தவுடன் வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகளைக் கவனித்து,  குழந்தைக்கு பால் கொடுத்து, காலையில் வடித்த சோற்றில், தனக்கு இல்லை என்றாலும்  பரவயில்லை தன் குழந்தை, தன் கணவன் பட்டினியாய் இருக்ககூடாது என்று இருக்கும் உணவை பகிர்ந்து அளித்து, அவர்களோடு உண்டு மன திருப்தி அடையும்  அம்மாக்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.

இப்படியே தங்களின் வாழ் நாள் முழுக்க குடும்பத்திற்காக உழைக்கும் அவர்களின் தியாகத்திற்கு ஈடு இணை கிடையாது. இதே போல நகரத்து தாய்மார்களும் குடும்பத்தின் நலனுக்காக நாள் தோறும் உழைத்தவண்ணம் இருக்கிறார்கள். வீட்டில் இருந்தாலும் அலுவலகம் செல்லும் அம்மாக்களாக இருந்தாலும் பிள்ளைகள் கணவன் ஆகியோருக்கு தேவையானவற்றை நிறைவேற்றி தங்களின் அன்பை தினமும் கொட்டி வைத்து வாழ்கிறார்கள். குடும்பங்களைக் காக்கிறார்கள். அப்படிபட்ட தாய்மார்களை வாழ்த்தி வணங்குவோம்!

உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் இதயம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துகள்!!

 சு. கற்பகம்(மாணவப் பத்திரிக்கையாளர்)


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ