Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயிரைக் கொடுத்து உயிரை ஈந்த அற்புத அன்னை: அன்னையர் தின உருக்கம்!

ந்த வருடம் அன்னையர் தினத்தில் லிஸ் ஸை பெருமைப்படுத்தும் விதமாகவும், சர்கோமா புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டவும் நியூயார்க் மாநகரில் ஃபண்ட் ரைசிங் வாக் நடத்தப்பட்டிருக்கிறது.

யார் அந்த லிஸ்?

புற்றுநோய் தாக்கிய நிலையில் மேலதிக சிகிச்சை எடுத்துக் கொள்ள, வயிற்றில் இருக்கும் கருவை கலைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்ல, அதை ஏற்க மறுத்து தன் உயிரையும் தியாகம் செய்திருக்கும் ஒரு தாய். அவர் பெயர்தான் லிஸ்.

16 மாதங்களேயான லில்லி தன் கையில் ஐ.பாட் உடன்தான் எப்போதும் இருக்கிறார். அதில் தன் தாய் லிஸ் பேசுவது, சிரிப்பது, எண்கள், வண்ணங்களை, வடிவங்களை சொல்லிக் கொடுப்பது என்று பார்த்துக் கொண்டேயிருக்கிறாள் லில்லி. ஆம் லில்லிக்கு அவளது அம்மாவை அறிமுகப்படுத்தியது இந்த ஐ-பாட் தான்.

லில்லியின் தாய் லிஸ், தான் 12 வார கர்ப்பமாக இருக்கும் போது தனக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதை கண்டறிகிறார். முழு உடல் பரிசோதனை எடுக்க வேண்டுமானால் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தியும் மறுத்துவிட்டார் லிஸ். குழந்தை பிறந்த பிறகு பரிசோதனை செய்ததில் வயிறு, இதயம் போன்ற இடங்களிலும் பரவிவிட்டிருக்கிறது புற்றுநோய். விதியின் கொடுமை குழந்தை பிறந்த ஆறே வாரங்களில் லிஸ் இறந்துவிட்டார்.

லில்லி வயிற்றில் இருக்கும் போது லிஸ் பேசியது, சிரித்தது என்று ஒவ்வொன்றையும் பதிவு செய்திருக் கிறார் குடும்ப நண்பரான கிறிஸ்டோபர் ஹென்ஸ். லிஸ் புற்றுநோய் தாக்கி போராடியது, குழந்தைக்கு தான் சொல்ல நினைக்கும் விசயங்கள் என்று எல்லாமே பதிவு செய்திருக்கிறார். இதனை '40 வீக்ஸ்' என்ற பெயரில் 60 மணிநேரம் ஓடக்கூடிய டாக்குமென்ட்ரியாக எடுத்துக் கொடுத்திருக்கிறார் ஹென்ஸ்.

லில்லி தனக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்ச்சிப்பூர்வமாக அந்த வீடியோவில் பகிர்ந்திருக் கிறார் லிஸ். “தன் வயிற்றில் சுமக்கும் குழந்தைக்காக வலியையும் வேதனையையும் தாங்கிக் கொண்டாள். தனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று ஒருநாளும் கவலை கொண்டதில்லை. அவளுடைய மனோதிடத்தை பார்க்க எனக்கே ஆச்சரியமாக இருந்தது" என்கிறார் லிஸ்ஸின் கணவர் மேக்ஸ்.

பிறந்து விவரம் தெரிவதற்கு முன்னரே இறந்துவிட்ட தன்னுடைய தாய் எப்படியிருப்பாள் என்பதை இதன்மூலமாக லில்லி உணர முடியும் என்று நம்புகிறார் அவரது தந்தை மேக்ஸ்.

- யதி

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ