Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பா...!

மெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்தவர் டி.எம். என்ற பெண். அவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் இரட்டைப் பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அதன் பிறகு அவருக்கும், அவரது காதலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதையடுத்து, டி.எம். தன்னையும், தன் குழந்தைகளுக்கும் பிரிந்து சென்ற காதலர் தங்களுக்கு ஜீவனாம்சம் வழங்கக் கோரி பசைக் கவுன்ட்டி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அந்த வழக்கு நீதிபதி சொஹைல் முகமது முன்பு விசாரணைக்கு வந்தபோது, குழந்தைகளின் மரபணுவை சோதிக்க நீதிபதி உத்தரவிட்டார். மரபணு சோதனையில் ஒரு குழந்தைக்கு டி.எம்.மின் காதலர் தந்தை என்பதும், மற்றொரு குழந்தை வேறொரு நபருக்கு பிறந்துள்ளது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து அந்த பெண்ணிடம் கேட்டதற்கு காதலருடன் உறவு கொண்ட மறு வாரத்தில், வேறு ஒருவருடனும் உறவு கொண்டதாக அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், இரண்டாவதாக உறவு கொண்ட நபர் யார் என்று தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். இதை கேட்ட நீதிபதி சொஹைல், டி.எம்.மின் முன்னாள் காதலர் அவருக்கு பிறந்த குழந்தைக்கு மட்டும் பராமரிப்பு தொகை வாரத்திற்கு 28 டாலர் அளித்தால் போதும் என்று கூறி தீர்ப்பளித்தார்.

இது பற்றி மருத்துவர்கள் பேசுகையில்.. ''விந்தணுக்கள் 5 நாட்கள் வரை உயிரோட்டத்துடன் இருக்கக் கூடியவை. அதனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் உறவு கொண்டுவிட்டு, அடுத்த வாரத்தில் வேறு ஒரு ஆணுடன் உறவு கொண்டால் இரண்டு பேரின் விந்தணுக்கள் 2 கருமுட்டைகளுடன் சேர்ந்து இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உள்ளது. இது போன்று 10 லட்சத்தில் ஒருவருக்கு நடக்கும்" என்றனர்.

- சா.வடிவரசு

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close