Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இயற்கை விவசாயிகளால் தான் ஆரோக்கிய உணவு!

வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்துள்ள தக்காங்குளம் கிராமத்தில் மே 10-ம் தேதி ‘பருவத்திற்கேற்ற பயிர் சாகுபடி’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, 'பசுமை விகடன்' ஊடக ஆதரவு வழங்கியிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய தமிழ்நாடு வேளாண் தொழில்நுட்ப கழகத்தின் தலைவர் எஸ்.ஆர். சுந்தரராமன், "விவசாயத்தில் தனி ஆள் வெற்றி பெறுவது கடினம். குழு விவசாயம் தான் வெற்றி பெறும். சமூக மற்றும் அரசியல் சேவைகளில் கிடைக்காத நிம்மதி விவசாயத்தில் கிடைக்கிறது. அதிலும் நாம் இயற்கை விவசாயி என்பதில் பெருமை கொள்ளலாம்.

மக்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கும் கடமை விவசாயிகளுக்கு இருக்கிறது. அது இயற்கை விவசாயிகளால் மட்டுமே முடியும். ஒத்த கருத்துள்ள பத்து விவசாயிகள் ஒன்றிணைந்து திட்டமிட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம். பயிற்சி வகுப்புகளில் கற்றதை செய்து பார்த்து இந்தளவுக்கு வளர்ந்துள்ளேன். அதை போல் நீங்களும் வெற்றிபெற வேண்டும். ரசாயன விவசாயத்தை 30 வருடமாக செய்து வந்தேன். இப்போது உண்மையை உணர்ந்து இயற்கை விவசாயம் செய்கிறேன்" என்றார்.

இயற்கை விவசாயத்திற்கு பயன்படும் அமுத கரைசல், பஞ்சகவ்யா, தேமோர் கரைசல் உள்ளிட்ட இடுபொருட்களின் தயாரிப்பு முறைகளை செய்து காட்டினார். செய்முறையின் போது மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளால் ஏற்படும் நன்மைகளை பற்றியும் சொன்னார். இயற்கை விவசாயம் பற்றி பயனுள்ள பல தகவல்களை தெரிந்து கொண்ட திருப்தியோடு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

கட்டுரை, படங்கள்: சு.ராஜா
(மாணவ பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ