Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காலில் சக்கரத்துடன் வலம் வரும் ஆமை!

விலங்குகளிலேயே மெதுவாக நடக்கும் விலங்கு ஆமை. ஆனால் 90 வயதான மிஸ்சஸ் டீ(Mrs.T) என்ற ஆமை, வேகமாக நடக்கும் ஆமை என்ற பெயரைப் பெற்றுள்ளது.

பிரிட்டனின் மேற்கு வேல்ஸைச் சேர்ந்த ஜூட் ரைடர் என்பவர் வளர்த்து வந்த ஆமையான மிஸ்சஸ் டீயை, எலிகள் தாக்கி முன்னிரண்டு கால்களை சிதைத்து விட்டன. கிட்டதட்ட 1000 யூரோக்கள் செலவிட்டு, மருத்துவ உதவி செய்து காப்பாற்றிய போதிலும், 'டீ'யால் நடக்க முடியவில்லை. தன் செல்ல பிராணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலையை கண்டு குடும்பமே சோகத்தில் இருந்திருக்கிறது. அப்போதுதான் ரைடரின் மகன் டேல்-ன் உதவி கிடைத்தது.


மெக்கானிக்கல் இன்ஜினியரான அவர், ஆமையின் கால் இருந்த இடத்தில் சக்கரத்தை பொருத்தி டீ யை நடக்கவைக்க பிளான் செய்தார். சிறிய மாடல் ஏர்கிராஃப்டிலிருந்து டையரை எடுத்து, ஆமையின் முன் பகுதியில் பொருத்துவதற்காக பிரத்யேகமாக ஒரு வடிவமைப்பை செய்தார். அதன் படி கால் இருந்த இடத்தில் இப்போது சக்கரம் வந்துவிட்டது.



தன் பின்னாங்காலை தள்ளி மெல்ல மெல்ல நகரத் தொடங்கினார் மிஸ்சஸ் டீ. ஆரம்பத்தில் நடக்கத் தடுமாறிய டீ தற்போது முன்பு நடந்ததை விட இரண்டு மடங்கு வேகமாக நகர்வதாக கூறுகிறார் ரைடர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சக்கரம் வைக்கப்பட்டவுடன், அந்த சக்கரம் எதற்கு என்பதை புரிந்து கொண்டு நடக்கத் தொடங்கினார்'டீ' என்று பெருமிதம் கொள்கிறார் ரைடர்.

தேவையான இடத்தில் நிற்கவும், திரும்பவும் மட்டும் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. மற்றபடி இன்னும் கொஞ்ச நாளில் ஓடத் தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஓட்டப் பந்தயத்துக்கு மிஸ்சஸ் 'டீ' ரெடி!

ரெ.சு.வெங்கடேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close