Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பாதரசத்தால் பகீர்...கொடைக்கானலைக் காப்பாற்றுங்கள்!'

வ்வொரு பகுதியிலும் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பிரச்னைகள் தொடர்கதையாகி விட்டன. தூத்துக்குடி, காயல்பட்டினம், திருவாரூர், திருப்பூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆலைகளால் விவசாய நிலங்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில் மலைவாசஸ்தலமான கொடைக்கானலிலும் மெர்க்குரி ஆலையின் கழிவால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளன.

இதுசம்பந்தமாக 'கொடைக்கானலின் நச்சு வரலாறு, கழிவுகளை சுத்தம் செய்வது மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதை நோக்கி' என்ற தலைப்பில் பூவுலகின் நண்பர்கள், இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் பப்ளிக் பாலிசி, தி அதர் மீடியா அமைப்புகள் இணைந்து சென்னை, கவிக்கோ அரங்கில் விவாத அரங்கினை நடத்தியது.

ஆலைக் கழிவால் பாதிக்கப்பட்டவரும், போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான மகேந்திர பாபு பேசியபோது, "நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, பற்பசை, எண்ணெய் போன்ற பொருட்களை தயாரித்து வருகிறது ஹிந்துஸ்தான் யூனிலீவர். இந்த நிறுவனம் 1983ம் ஆண்டு கொடைக்கானலில் பாதரச தெர்மா மீட்டர் தயாரிக்கும் ஆலையை நிறுவியது. சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் ஆலையில் பணி புரிந்து வந்தனர். காலப்போக்கில் ஆலையில் இருந்து வெளியேறிய பாதரச கழிவுகளாலும், பாதரச லெட் வேதியியல் மாற்றங்களாலும் பல தொழிலாளர்கள் உடல் ரீதியாக பாதிப்படையத் தொடங்கினர். 1983லிருந்து 2001 வரை, இதுபற்றியான விழிப்புணர்வே இல்லாமல் 1,047 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். பல போராட்டங்களுக்குப் பிறகு ஆலை மூடப்பட்டு, தெர்மா மீட்டர் தயாரிப்பும் நிறுத்தப்பட்டது.

ஆனால், இன்று வரை 10,000 டன் பாதரச கழிவுகள் கொடைக்கானலில் அகற்றபடாமலேயே உள்ளது. இதனால் கொடைக்கானலில் பல குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் மட்டுமின்றி மலையின் சூழலும், பழங்கள், காய்கறிகள் விளைச்சலும் பாதிப்படைந்துள்ளது. நீரும் நிலமும் நஞ்சாகி வருகின்றன" என்ற தகவல்களை பகிர்ந்தார்.

ஆலை பிரச்னைகளை முன்வைத்து சட்ட நிபுணர் டாக்டர். உஷா ராமநாதன், பொது சுகாதார நிபுணர் டாக்டர். ரகல் கெய்டொண்டே, ஆலை போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய நவ்ரேஷ் மோடி, கொடைக்கானல், கடலூர், கொடுங்கையூர் பகுதிகளில் மாசுப்பாட்டால் பாதிக்கப்பட்டு வரும் மக்களும் விவாத அரங்கில் கலந்துகொண்டு சில முடிவுகளை அறிவித்தனர்.

"மக்களுக்கும், இயற்கைக்கும் பாதுகாப்பான திட்டங்களைத்தான் அரசு ஆதரிக்க வேண்டும். ஆலையினை மூடி பதினைந்து ஆண்டுகள் கழித்து, இன்றும் பாதரச கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் பாதரசம், கழிவு நீரோடு கலந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கும் செல்கிறது. இதனால் நீரும், நிலமும் விஷமாவதோடு, குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் உடல் பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் பாதிப்படைந்த மக்களுக்கு எவ்வித இழப்பீடும், மருத்துவ வசதியும் இன்றுவரை கிடைக்கவில்லை. பல வெளிநாட்டு கம்பெனிகளை அரவணைக்கும் மத்திய, மாநில அரசுகள் சுற்றுப்புறத்தின் மீதும், தொழிலாளர்கள் மீதும் அக்கறை கொள்வதே இல்லை.

பாதுகாப்பான மருத்துவக் குழுக்களை அமைத்தல், இயற்கைக்கு எவ்வித மாசுபாடு இல்லாமல் இருத்தல் போன்ற விஷயங்களை அரசுகள் கண்டுகொள்வதே இல்லை. இழப்புகளும், அழிவுகளும் நடந்தால் கண்டுகொள்ளாமல் அமைதி காக்கின்றன. இந்த நஞ்சை விதைத்தமைக்கு அரசும், ஆலையும்தான் பொறுப்பேற்க  வேண்டும். பாதரசக் கழிவுகளை சுத்திகரிப்புடன் அகற்ற வேண்டும். இதை பெரும் பிரச்னையாக பார்க்காவிட்டால், கொடைக்கானலும், அதன் சுற்றுவட்டாரங்களும் அழிந்தேவிடும். வருகின்ற சந்ததிகளும் கண்டிப்பாக பாதிக்கப்படுவர். அதனால் அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

-கு.முத்துராஜா


படங்கள்: பா.அருண்
(மாணவ பத்திரிகையாளர்கள்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ