Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குழந்தையை தொலைத்தால் பதற்றமடைய வேண்டாம்!

னி உங்கள் குழந்தையை நீங்கள் தொலைத்து விட்டால் பதற்றம் அடைய வேண்டாம்.

ஆம்! இனிமேல் உங்கள் குழந்தை தொலைந்தால் கண்டுபிடிப்பது மிகவும் எளிது. அரசாங்கம் தொலைந்த குழந்தையை கண்டுபிடிக்க புதிய வலைத்தளத்தை தொடங்கியுள்ளது. www.khoyapaya.gov.in என்ற இணையத்தளத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி தொலைந்த குழந்தை குறித்த விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றலாம்.

இந்த இணையத்தளத்தை பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகமும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறையும் இணைந்து நிறுவியுள்ளது. அந்தந்த ஊரில் உள்ள காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் மீட்பு மையம் உதவியுடன் இந்த இணையதளம் செயல்படும்.

லட்சக்கணக்கான மக்களை இணைக்கும் இந்த இணையதளத்தின் மூலம் குழந்தைகளின் படங்களை வைத்து மிகவும் எளிதாக குழந்தைகளை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைக்க முடியும் என நம்பப்படுகிறது. தற்போது இந்த இணையதளம் ஆங்கிலத்தில் உள்ளது. மிகவிரைவில் ஹிந்தி மற்றும் இதர பிராந்திய மொழிகளிலும் வரவுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்த இணையத்தளத்தை மிக விரைவாக உபயோகப்படுத்தவும், எளிதாக அனைவருக்கும் சென்றடையவும் இந்த இணையதளத்தை ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தினசரி நாளிதழ்களிலும், தொலைகாட்சிகளிலும் காணாமல் போன குழந்தைகள் சம்பந்தமான செய்திகள் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை குழந்தைகள் தொலைந்தால் www.trackthemissingchild.gov.in இணையத்தளத்தில் மட்டுமே காண முடியும். அதுவும் காவல்துறையினர் மட்டுமே தொலைந்த குழந்தைகளின் புகைப்படங்களையும் பதிவேற்ற முடியும். ஆனால், இனி சாதாரண மக்களும் www.khoyapaya.gov.in இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ய முடியும்.

ஜி.கே.தினேஷ்,
(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ