Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இது இன்னுமொரு செல்ஃபி விபரீதம்!

செல்ஃபி விபரீதங்களில், இன்னொரு எண்ணிக்கையாக இணைந்திருக்கிறார் ரஷ்யாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்.

21 வயதான ரஷ்யப் பெண், தன் அலுவலகத்தில் இருந்த சமயத்தில் பிஸ்டலை தலையில் வைத்து சுடுவதுபோல ‘அல்டிமேட்’ செல்ஃபி எடுக்க ஆசைப்பட, தவறுதலாக டிரிக்கரை அழுத்தியதால் குண்டு பாய்ந்தது. மாஸ்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு, சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இளம்பெண்ணுக்கு எப்படி பிஸ்டல் கிடைத்தது என்று போலீஸ் விசாரணை நடந்துகொண்டிருக்க, விடுமுறையில் சென்ற அந்த அலுவலகத்தின் செக்யூரிட்டி தன் 9 எம்.எம். பிஸ்டலை விட்டுச் செல்ல, அதை இந்தப் பெண் தன் செல்ஃபிக்காக பயன்படுத்த எண்ணியிருக்கலாம் என்று யூகிக்கின்றன ரஷ்ய ஊடகங்கள்.

தற்காப்பு ஆயுதத்தை கவனைக்குறைவாக கையாண்டு, அது விபத்து ஏற்படக் காரணமாக இருந்ததால், அந்தத் துப்பாக்கியின் உரிமையாளருக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.

என்று தீரும் இந்த செல்ஃபி மோகம்?!

- இனியா

எடிட்டர் சாய்ஸ்