Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்கள் சிறுதொழில் தொடங்க வட்டி மானியத்துடன் வங்கி கடன்!

ந்தாவது முறை தமிழக முதல் அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஜெயலலிதா நேற்று மதியம் 3 மணி அளவில் தலைமை செயலகம் வந்தார்.

கோட்டையில் தனது அறைக்கு சென்று, முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்ட அவர், 'மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட நலிவுற்ற குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டம்' உள்ளிட்ட 5 புதிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

2011–ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் 185 லட்சம் குடும்பங்களில் 25.88 லட்சம் குடும்பங்கள் மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்டுள்ளது. சமூக மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற நிலையில் உள்ள மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பு திட்டம் ஒன்றினை செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இத்திட்டம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும். வறிய குடும்பத்தின் குடும்பத் தலைவியான மகளிரோ அல்லது அவர்களது குடும்பத்திலுள்ள 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட ஆண் அல்லது பெண் உறுப்பினர் சிறப்பு வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பயனாளியாக தகுதி உடையவர் ஆவார்.

மகளிரை தலைவராகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நிறுவனங்களில் உறுதியான வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி, சுய வேலைவாய்ப்பிற்கான திறன் வளர்ப்பு பயிற்சியுடன் தனிநபர் அல்லது ஒத்த தொழில் செய்வோருக்கு கூட்டாக தொழில் செய்வதற்காக வட்டி மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும். அத்தோடு, ஆடைத் தயாரிப்பு, சில்லரை வணிகம், அழகு நிலையம், கணினி இயக்கம், கட்டுமானம், மின்னணு சாதனங்கள் பழுது நீக்கம், தோல் பொருள் உற்பத்தி, இலகுரக வாகன இயக்கம், செயற்கை ஆபரணங்கள் மற்றும் பேருந்து நடத்துனர் பயிற்சி போன்ற பயிற்சிகள் பயனாளிகளுக்கு இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

மேலும், வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளித்தல் மற்றும் தொழில் தொடங்குவதற்கான வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடன் ஆகியவற்றுக்காக ஒவ்வொரு பயனாளிக்கும் 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை செலவிடப்படும். இத்திட்டத்தின் கீழ் மகளிரை தலைவராகக் கொண்டுள்ள ஏழை எளிய குடும்பங்கள் அனைவரும் 5 ஆண்டு காலத்திற்குள் பயன் பெறுவர். 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான மொத்த திட்ட மதிப்பீடு 750 கோடி ரூபாய் ஆகும். இதற்காக நடப்பாண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

 - சா.வடிவரசு

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close