Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பறக்கும் மனிதன் - அலெக்ஸாண்ட்ரு டுரூ

னிதனால் பறக்க முடியுமா? ஒருவேளை மனிதன் பறந்தால்? இதுபோன்ற கேள்விகள் நமக்குள் இருந்துகொண்டே இருக்கும் ஆனால் ஒருவர் கால்களில் ஹோவர்போட்டுகளை கட்டிக்கொண்டு பறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கின்னஸ் சாதனையாக 162 அடி பறந்ததே இருந்தது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. 

படம்: கின்னஸ் உலக சாதனை

இந்த சாதனையை கனடாவை சேர்ந்த கேட்லின் அலெக்ஸாண்ட்ரு டுரூ கனடாவில் உள்ள க்யூபெக் ஏரியில் நிகழ்த்தியுள்ளார். அவரது கால்களில் கட்டப்பட்டிருந்த ஹோவர்போர்டு உதவியுடன் நீர் மட்டத்திலிருந்து 16 அடி உயரம் மேலெழும்பி 905 அடி தூரத்துக்கு பறந்துள்ளார் அலெக்ஸாண்டர் டுரூ. இது முந்தைய சாதனையை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

இதன் மூலம் உலகின் அதிக தொலைவு வேகமாக பறந்தவர் என்ற கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இது குறித்து கூறிய அலெக்ஸாண்ட்ரு டுரூ,  ''மனிதர்களால் ஹோவர்போர்டு உதவியுடன் நீண்ட தொலைவு பறக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த சாதனையை நிகழ்த்தினேன். இதற்கு கால்களின் மூலம் சரியாக நின்று கன்ட்ரோல் செய்தால் நீண்ட தூரம் பறக்க முடியும்" என்று கூறியுள்ளார்.
 
இந்த சாதனை குறித்து கூறியுள்ள கின்னஸ் சாதனை குழு, ''அலெக்ஸாண்ட்ரு டுரூ போன்றவர்கள் இதுபோன்ற சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்த வேண்டும். இது சாதனையாளர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் விஷயமாக இருக்கும்" என்றனர்.
 
அலெக்ஸாண்ட்ரு டுரூவின் சாதனை வீடியோ பதிவு:
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ