Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'டுபாக்கோ மானிட்டர்' செயலி...!

புகையிலை தடை சட்டங்கள் சர்வ சாதாரணமாக மீறப்படுவதை, எல்லா இடங்களிலும் காணவே முடிகிறது என குமுறுவோருக்கு ஒரு நற்செய்தி. ஆமாம் அவர்கள், தங்களின் பெயரை குறிப்பிட்டோ, குறிப்பிடாமலோ புகாராக, அரசின் புகையிலை தடுப்பு அமைப்புக்கு தெரிவிக்க, 'தேசிய புகையிலை ஒழிப்பு அமைப்பு' என்னும் மக்கள் அமைப்பு, ஒரு பாலமாக செயல்படுகிறது.

அந்த அமைப்பின் தலைமையகம், சென்னை கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு, புகையிலை கண்காணிப்பான் (டுபாக்கோ மானிட்டர்) எனும் செயலியை உருவாக்கி உள்ளது. இதற்கு, ஆறு வார உழைப்பை, ஆறு தன்னார்வலர்கள் அளித்துள்ளனர். இந்த செயலியை ஆண்ட்ராய்டு செல்போன்களில், 'கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதில், தற்போதைய புகையிலை பொருட்கள் அழிப்பு தொடர்பான செய்திகள், புகையிலையின் தீமைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும், புகையிலை விற்பனை உள்ளிட்ட சட்ட மீறல்கள் குறித்த புகார் அளிப்பதற்கான வசதியும் அதில் உள்ளது. செயலியின், புகார் அளிக்கும் பகுதியில் சம்பந்தப்பட்ட புகைப்படம், புகாரின் வகை, இடம் உள்ளிட்ட விவரங்களை இணைத்து அனுப்ப வேண்டும். அந்த புகார், அரசின் புகையிலை தடுப்பு அமைப்புக்கு அனுப்பப்பட்டு கண்காணிக்கப்படும். புகாரளிப்பவருக்கு, புகார் பெற்றுக் கொண்டதற்கான சான்றும், நடவடிக்கைகளும் தொடர்ந்து அனுப்பபடும்.

இந்த செயலியை உருவாக்கிய டாக்டர் குப்தா, மாரிமுத்து, முத்துசாமி, சிரில் அலெக்சாண்டர், ரெஜினா ஆகியோர் கூறும்போது, ''தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், ஒட்டன் சத்திரம் பகுதிகளில் புகையிலை பயிரிடுவோருக்கு, சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் உள்ளன. திருச்சி உள்ளிட்ட பகுதிகளில், பீடி தயாரிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகள், பெண்களுக்கு கூட நுரையீரல் நோய்கள் உள்ளதோடு, குறைந்த வயது மரணமும் நிகழ்கிறது.

இதை தடுக்க, புகையிலை பொருட்களின் விற்பனையை தடைசெய்வது தான் ஒரே வழி. அதற்கு, மக்கள் ஒருங்கிணைப்போடு, அரசுக்கு புகார் அளிக்க வேண்டும். அதற்கான முதல் முயற்சியே, 'டுபாக்கோ மானிட்டர்' செயலி. தற்போது, ஆங்கில மொழியில் இருக்கும் இந்த செயலியை, பிற மாநில மொழிகளில் வெளியிடும் திட்டமும், அனைத்து வித அலைபேசிகளிலும் தரவிறக்கம் செய்யும் வகையில் மேம்படுத்தும் திட்டமும் உள்ளது.

தற்போது, தமிழகம், பஞ்சாப், சண்டிகர், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த செயலி அறிமுகத்திற்கு, ஆதரவு கிடைத்திருக்கிறது. இதனால், மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்படும் என நம்புகிறோம்" என்றனர்.

ர.நந்தகுமார், க.தனலட்சுமி

(மாணவ பத்திரிகையாளர்கள்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ