Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொலைத்த பொருட்கள் விற்பனைக்கு!

க்கள் தொலைத்த பொருட்களை எல்லாம் சேகரித்து, ஓரிடத்தில் வைத்து விற்பனை செய்கிறார்கள் அமெரிக்காவில் உள்ள அலபாமாவில்!

விமானத்தில், ரயிலில், பேருந்தில், சாலையில் என மக்கள் தொலைத்த, உரிமையாளரின் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பொருட்களை எல்லாம் எடுத்து விற்பனை செய்வதற்கென்றே, அலபாமாவில் 40,000 ஸ்கொயர் ஃபீட்டில் விரிந்திருக்கிறது ‘அன்க்ளைம்டு பேக்கேஜ் சென்டர்’ கடை. ஆடைகள், கூலிங் கிளாஸ், ஐபேட், ஐபோன், பை, கோட், செருப்பு என்று நீள்கிறது இங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் பட்டியல். தங்க, வைர நகைகளும் இதில் அடக்கம்.

‘‘பொது இடங்களில் கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை அரசாங்கத்திடம் விலைக்கு வாங்கி 20% ஆரம்பித்து 80% தள்ளுபடியில் விற்பனை செய்கிறோம். உரிமையாளரின் அடையாளம் தெரியும் பொருட்களை அவர்களுக்கே அனுப்பி வைத்து விடுகிறோம்!’’ என்கிறார் ‘அன்க்ளைம்டு பேக்கேஜ் சென்டர்’ன் பிராண்ட் அம்பாஸிடர் பிரண்டா கேன்ட்ரல்.

சென்ற வருடம் மட்டும் இப்படி 3,400 ஐபேட், 5,000 கேமராக்கள், 40,000 ஷூக்களை விற்பனை செய்திருக்கிறது இந்தக் கடை. சில உரிமையாளர்கள் தாங்கள் தொலைத்த பொருட்களை இங்கே சென்று தேடி கண்டடைந்து, பாதி விலைக்கு வாங்கிச் செல்வதும் நடக்கிறது!

 - அதிதி

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ