Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டே வயதில் டிஜேவாகக் கலக்கும் சிறுவன்!

லகிலேயே மிகச் சிறு வயதில் 'டிஸ்க் ஜாக்கி' எனப்படும் டிஜே-யில் கலக்கிக்கொண்டிருக்கிறான், ஆர்ச் ஜூனியர் (ஏஜே) எனச் செல்லமாக அழைக்கப்படும் ஒராட்டிவ் ஹேங்வேன் (Oratilwe Hlongwane). தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரைச்சேர்ந்த இவனுக்கு வயது இரண்டு.

தந்தை, படிப்பு சம்பந்தமான ஆப்ஸ்களையும், டிஜே ஆப்ஸையும் டவுண்லோடு செய்திருந்தார். அந்த, டிஜே ஆப்ஸ் மூலம் தன்னிச்சையாகவே மியூசிக் ப்ளே செய்யக் கற்றுக்கொண்டான், ஏஜே.

இவனது ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக, அவன் விருப்பத்துக்கு ஏற்றவாரே விட்டுவிட்டனர் பெற்றோர். ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், டிஜே ப்ளே செய்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினான். மியூசிக் மிக்ஸிங் செய்தபடியே, பேஸ் கீக்களை தன் பிஞ்சு விரல்களால் அட்ஜஸ்ட் செய்வதை அனைவரும் ஆச்சர்யத்துடன் ரசித்தனர்.

ஏஜே ஒரு வயது இருக்கும்போதே ஐபேடை எப்படி இயக்குவது என்று கற்றுக்கொண்டான். பிறகு, அதில் இருக்கும் டிஜே ஆப்பில் மியூசிக் எப்படி ப்ளே செய்வது, பேஸ் எப்படி அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொண்டான். இதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட பெற்றோர், ஏஜே மியூசிக் மிக்சிங் செய்வதை வீடியோவாகப் படம் பிடித்து, ஆன்லைனில் அப்-லோடு செய்தார்கள். இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

தற்போது, இவனுக்கு பேஸ்புக்கில் 25,000 ஃபாலோயர்கள் இருக்கின்றனர். குட்டி செலிப்ரிட்டியாக மாறியிருக்கும் இந்தச் சிறுவனை, தென்னாப்ரிக்காவில் உள்ள பிரபல நிறுவனங்கள் விளம்பரதாரராக இருக்கும்படிக் கேட்டு, போட்டி போடுகின்றனர். ஆனால் சிலர், எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ''பார்ட்டிகள், கிளப்புகளில் டிஜே பண்ண அனுமதிக்க மாட்டோம். எதிர்காலத்தில் அவனுக்கு விருப்பம் இருந்தால் செய்யட்டும். ஆனால், இவன் இன்னொரு பில்கேட்ஸ் ஆக வருவதற்கு வாய்ப்புள்ளது" என்கிறார்கள், ஏஜேயின் பெற்றோர்.

-என்.மல்லிகார்ஜூனா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close