Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எல்லை'யில்லா ஆனந்தம்!

மூன்று பக்கம் கடலாலும், ஒரு பக்கம் மலையாலும் சூழ்ந்துள்ள நமது இந்தியாவை 'தீபகற்பம்' என்று அழைக்கிறோம். பல்வேறு மக்கள், மதங் கள், காலநிலை உள்ளடக்கிய இந்தியா, தனக்குள் சர்வதேச எல்லையை கொண்டுள்ளது. அந்த 10 சர்வதேச எல்லைகளைக் காண்போம்...

பஞ்சாப் - அமிர்தசரஸ் - வாகா எல்லை


சுற்றுலாப் பயணிகள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் இது. இங்குதான் சீக்கியர்களின் பொற்கோவில் அமைந்துள்ளது, அதுமட்டுமில்லாமல் ஜாலியின் வாலாபாக் படுகொலை நடந்த இடமும் இதுவே. தலைப் பில் கூறியபடி முதல் 10 சர்வதேச எல்லைகளை உள்ளடக்கியதில் இதற்கே முதலிடம். நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்தியா-பாகிஸ்தான் நல்லிணக்க எல்லை.

இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் மாலைப் பொழுதில் செய்யும் ராணுவ மரியாதையை காணவே ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

ஹிமாச்சல் பிரதேசம்-சிட்குள்

ஹிமாச்சல் பிரதேசத்தின் அமைந்துள்ள இந்த சிட்குள் திபெத்திய நாட்டில் எல்லையை ஒட்டி இருக்கிறது. அந்நாட்டின் எல்லையைத் தொடவில்லை என்றாலும், ராணுவ அதிகாரிகளின் குடியிருப்புகளைத் தவிர, அங்கு பொது மக்கள வசிக்கவோ, செல்லவோ அனுமதி இல்லை. 

ராஜஸ்தான்- லோங்கன்வாலா


மாதா தானோட் கோயில் அமைந்துள்ள பகுதிதான் ராஜஸ்தானில் உள்ள லோங்கன்வாலா.  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமில்லாமல், இந்தியர்களானாலும் இங்கு செல்ல சிறப்பு அனுமதி வாங்க வேண்டும்.

தமிழ்நாடு- ராமேஸ்வரம்

கடல் வழியாக செல்லும் பாம்பன் பாலத்தைக் கொண்ட ராமேஸ்வரம் வழியாக ஶ்ரீலங்கா செல்ல வெறும் 50 கி.மீ தூரம்தான். அதோடு மட்டுமில்லாமல் நீர் வழியாக பல நாடுகளுக்கு  செல்லும் பாதையையும் கொண்டது.

மணிப்பூர்- மொரே

மணிப்பூரின் இந்த மோரே நகரம் இந்தியா-பர்மா எல்லையில்தான் அமைந்துள்ளது. இங்கிருந்து தரைவழியாக மியான்மர் செல்லலாம். மியான்மர் பகுதியில் இருந்து தாய்லாந்து மற்றும் சீனா நாடுகளுக்கு செல்லலாம்.  மூன்று நாடுகளுக்கு, இது ஒரு தொழில்முனையமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்காளம்- மால்டா

இந்தியாவின் மாம்பழங்களின் நகரமான இங்குதான் இந்தியா-பங்களா தேஷ்- எல்லை இருக்கிறது.

உத்தரபிரதேசம்- கோரக்பூர்

இந்தப் பகுதி இந்திய-நேபாளுக்கு நுழைவு வாயிலாக இருக்கிறது. பழம்பெரும் சக்தி வாய்ந்த கோயில்களைக் கொண்ட இந்த சனொலி நகரம் யோகா பயிற்சியில் சிறந்து விளங்குகிறது.

குஜராத்- லக்பத்

குஜராத் மாநிலத்தின் லக்பத் பகுதியிலிருந்து, சிறிது தூரத்தில் அமைந்துள்ளது பாகிஸ்தான் எல்லை.

மேற்கு வங்காளம் -அலிபுர்துவார்

ஏற்கெனவே பங்களாதேஷ் எல்லையைக் கொண்ட மால்டா நகரம் மட்டுமில்லாமல், அலிபுர்துவாரில் பூட்டானின் எல்லையையும் கொண்டுள்ளது.

அந்தமான் நிக்கோபார் மற்றும் நிக்கோபார் தீவுகள்

தரை வழியாக இந்த ஒரு எல்லையைத் தொடவில்லை என்றாலும், மிக ஆழமான கடல் வழியாக சர்வதேச நாடுகளுக்குச் சில நூறு கி.மீ தூரத்தில் செல்லலாம்.

- ராஜூ முருகேசன்
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ