Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தை பெற்றுக்கொண்டால் 3,58,000 ரூபாய் பரிசு!

போர்ச்சுக்கல்... சர்வதேச பொருளாதார நெருக்கடியில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு. இதனால், அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்குநாள் அதிகமாகக் காணப்படுவதோடு, இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு குறைவான பிறப்பு விகிதமே காணப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள அல்கோடிம் என்ற கிராமத்தில், கடந்த 20 வருடங்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இறந்து விட்டனர். இதனால் 0.9 என்ற மிகவும் குறைவான அளவிலேயே அங்கு பிறப்பு விகிதம் உள்ளது. இது தற்போது தேசிய அளவில் அங்கு மாபெரும் பிரச்னையை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில், ''அந்தக் கிராமத்தில் உள்ள தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு 5 ஆயிரம் யூரோ பரிசு வழங்கப்படும்'' என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் இது 3 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் ஆகும்.

போர்ச்சுக்கல் அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் பல தம்பதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகாரிகளோ, அரசின் இந்த அறிவிப்பால் பிறப்பு விகிதம் நிச்சயம் அதிகமாகும் என்ற நம்பிக்கையில் உள்ளார்கள்.

எது எப்படியோ.. 'குவா குவா சத்தம்..' அங்கு கேட்கப்போவது மட்டும் நிஜம்!

 - சா.வடிவரசு

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close