Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தென்னை மர திருமணம்!

திருமண நாள் என்பது மகிழ்ச்சியான, மறக்க முடியாத நாளாக ஒருத்தருடைய வாழ்நாளில் இருந்து வருகிறது. அந்த திருமணத்துக்கு சொந்தங்களையும், நண்பர்களையும் அழைக்க, அழைப்பிதழ்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு.

சொல்லப்போனால் நம்முடைய அந்தஸ்தை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகவும் அழைப்பிதழ்கள் இருந்து வருகின்றன. பெரும்பாலும் அழைப்பிதழ்களில் சாமி படங்கள், மலர்கள், கட்சித் தலைவர்கள், அன்பை வெளிப்படுத்தும் கார்ட்டூன்கள்தான் இருக்கும்.

ஆனால், நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் ஒன்றை, திருமண அழைப்பிதழில் பிரசுரித்து அங்கீகரிப்பது அரிதிலும் அரிதாக நடக்கக்கூடிய விஷயம். இத்தகைய சூழலில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டரில் உலாவும் இன்றைய இளம் தலைமுறையினரை, வித்தியாசமாக செய்யும் திருமணங்கள் அதிகளவில் ஈர்த்து வருகின்றன. அப்படியொரு வித்தியாசமான திருமண அழைப்பிதழை அச்சிட்டு திருமணத்தை நடத்தியுள்ளனர், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள செல்லியம்பட்டி சுப்பையா குடும்பத்தினர்.

திருமண அழைப்பிதழின் முன்பக்கத்தில் 'தென்னை மரத்தை' இடம்பெறச்செய்து, தென்னைமேல் வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்தி, திருமணத்தை நடத்தியுள்ளனர்.

இத்திருமணம் குறித்து அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணி பேசும்போது, "எங்க குடும்பத்துல அண்ணன், தம்பிகள் மூணு பேரு. நான் இரண்டாவது பையன். எங்க அப்பாதான் ஏ.சி.சுப்பையா பாலாண்டார். எங்களுக்கு தென்னை விவசாயம்தான் முக்கியத் தொழில். இத 65 வருஷமாக செஞ்சிட்டு வர்றோம். எங்களுக்கு இன்னைய நாள் வரை சோறு போடுறது தென்னை விவசாயம்தான். தென்னையை  நாங்க வளர்த்தோம். அது எங்கள வளர்த்து விட்டிருக்கு.

தென்னை விவசாயத்தோடு தேங்காய் நார் மில்லும், குடோனும் வெச்சிருக்கோம். எங்க அண்ணனும், தம்பியும் தென்னை விவசாயம் செஞ்சிட்டு வர்றாங்க. தென்னை விவசாயத்தால எங்க குடும்பம் பெரியளவுல வளர்ந்திருக்கு. அதுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத்தான், எங்க அண்ணன் மகன் கல்யாணத்துல, குலை தள்ளிய தேங்காயுடன் இருக்கிற தென்னை மர படத்தை முன்பக்கத்திலப் போட்டு, நன்றியை வெளிப்படுத்தியுள்ளோம்.

எங்க அண்ணன் மகன் அருள்மணி எம்.பி.ஏ. முடிச்சிருக்கிறாரு. பொண்ணு எம்.சி.ஏ முடிச்சிருக்காங்க. இரண்டு பேருமே, எங்க வாழ்க்கைக்கு ஆதாரமா இருந்த தென்னை மர போட்டோவ பத்திரிகையில போடுறதுக்கு சம்மதிச்சாங்க. கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு எங்க தோப்புல விளைஞ்ச, தேங்காயைத்தான் அன்பளிப்பா கொடுத்தோம். சொல்லப்போனா, தென்னை மரம் இல்லாம, இந்தக் குடும்பம் இல்லீங்க" என நன்றிப் பெருக்குடன் சென்னார்.

தென்னை மரத்தால் உங்கள் குடும்பமும் வளர்ந்தது போல, மணமக்களின் வாழ்வும் தென்னையை போல் வளர்ந்து எல்லோருக்கும் பயனளிக்கட்டும்.

வாழ்த்துக்கள்...!

-ம.மாரிமுத்து

படங்கள்: சே.சின்னத்துரை
(மாணவ பத்திரிகையாளர்கள்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ