Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'டை' கட்டிய ரெஸ்டாரெண்ட்!

யிரக்கணக்கான 'டை'களை ரெஸ்டாரெண்டுக்குள் தோரணமாகத் தொங்கவிட்டு பிரபலமாகியுள்ளது, அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள 'பினாக்கிள் பீக்' (Pinnacle Peak) ரெஸ்டாரெண்ட்.

இங்கு வருபவர்கள், டை (necktie) அணிந்திருந்தால் அனுமதி கிடையாது. உள்ளே வந்து சாப்பிட வேண்டும் என்றால், 'டை'யைக் கழற்றிவிட்டுத்தான் வர வேண்டும். தெரியாமல் 'டை' அணிந்து வந்துவிட்டால், உடனே வேலையாட்கள் ஓடி வந்து 'டை'யைக் கத்தரியால் கட் பண்ணி, வாசலில் தொங்க விட்டுவிடுவார்கள்.

1957-ல் சிறிய கடையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பினாகிள் பீக், சிறிது காலத்திலேயே ரெஸ்டாரெண்ட்டாக மாறியது. ஆனால், டையை கட் பண்ணும் பழக்கம் சமீபத்தில்தான் அமலுக்கு வந்தது. எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்றால், ஒரு நாள், எக்ஸிகியூட்டிவ் ஒருவர் டை அணிந்து இங்கு வந்ததைப் பார்த்த உரிமையாளர், 'இங்கு வருபவர்கள் சிம்பிளாக இருக்க வேண்டும். அதனால், 'டை'யைக் கழற்றிவிடுங்கள்' என்று கேட்டுக்கொண்டார். ஆனால், அந்த எக்ஸிகியூட்டிவ் அவர் பேச்சைக் கேட்கவில்லை. உரிமையாளரோ, பக்கத்தில் இருந்த கத்தரியை எடுத்து, அவருடைய 'டை'யைக் கட் பண்ணித் தூக்கி எறிந்துவிட்டார்.

உடனே கோபப்பட்டிருக்கவேண்டிய எக்ஸிகியூட்டிவ், 'இந்தச் சம்பவம் நடந்ததன் நினைவாக, கட்பண்ணிய என்னுடைய 'டை'யை எல்லோருக்கும் தெரியும்படித் தொங்க விட வேண்டும்' எனக்  கேட்டுக்கொண்டார். அவர் சொன்னபடியே உரிமையாளரும் செய்தார். 'அட, இந்த ஐடியா புதுமையாக உள்ளதே' என நினைத்து  ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பழக்கம், இப்போதும் தொடந்து கொண்டே இருக்கிறது.

கட் பண்ணிய 'டை' மீது, அதற்கு உரியவரின் பெயர் ஒட்டியிருக்கும். இதனால், பீக் ரெஸ்டாரெண்ட் ரொம்பவே பிரபலமாகிவிட்டது.

என்.மல்லிகார்ஜுனா

எடிட்டர் சாய்ஸ்