Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரோபோவுக்கும் ரோபோவுக்கும் கல்யாணம்! (வீடியோ)

னிதர்களின் வேலைகளை மட்டுமா பகிர்ந்து கொள்ள வேண்டும், அவர்கள் திருமணம் செய்து கொள்வது போலவே எங்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள் என்று இந்த இயந்திர மனிதர்கள் கேட்டுவிட்டார்களோ என்னவோ?

மணமகன் ரோபோவை 'போரிஸ்' மாய்வா டென்க்கி என்ற  நிறுவனமும், மணமகள் ரோபோவை ஆண்ட்ராய்ட் உதவியுடன் ஜப்பானிய பெண் போல 'யுகிரின்' டகாயுகி டுடூ' என்ற நிறுவனமும்  தயாரித்திருக்கிறது.

இருவருக்குமான திருமணம் சில விஞ்ஞான பெருமக்களால் நிச்சியக்கப்பட, கடந்த 27ஆம் தேதி ஜப்பானில் விசித்திரமான ரோபோ திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க திருமணத்தில் கலந்து கொள்ள 81 டாலர் கட்டணம் வசூலித்திருக்கிறார்கள். மணமக்களின் படங்கள் இதயத்தில் இருப்பது போன்று டிசைன் செய்த அழைப்பிதழ் அச்சடித்து, கட்டணம் செலுத்தியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட, இத்திருமணத்தில் 100 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.


திருமணத்தில் கடைபிடிக்கப்படும் அனைத்து சடங்குகளும் கடைபிடித்து கேக் வெட்டி, மணமக்கள் முத்தம் பரிமாறி, தன் சக(ரோபோ) நண்பர்கள் நடனமாட, மணமக்களும் நடனமாடி பார்வையாளர்களை அசத்தியிருக்கின்றனர்.

அதோடு இந்த திருமணத்தில் மணமக்களுக்கு உதவ(?..), விருந்தினர்களை வரவேற்க ஹெல்பர் ரோபோக்களும் கலந்து கொண்டுள்ளன. மனிதர்களுக்கு விருந்துடன் ரோபோ திருமணம் சீரும் சிறப்புமாய் நடந்தது.

- யதி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ