Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி உங்களால் உடைக்க முடியாது!

மூக வலைதளங்கள் வாயிலாக, உலகமே திரண்டு ஒரு நிறுவனத்துக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளது. அது எந்த நிறுவனம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?

கோக்ககோலா? மான்சாண்டோ? கேஎஃப்சி?... கண்டிப்பாக நீங்கள் கண்டுபிடித்திருக்க மாட்டீர்கள். சீல்டு ஏர் (Sealed Air) என்கிற பபில் விராப் ( Bubble Wrap) பேகேஜிங் கவர் தயாரிக்கும் நிறுவனம்தான் அது.

பேகேஜ் செய்து அனுப்பப்படும் பெரிய இயந்திரங்கள் முதல் கையடக்க செல்போன் வரை பாதுகாப்பாக செல்ல பயன்படுத்தப்படும் இந்த Bubble Wrap-ஐ அனைவருமே பார்த்திருப்போம். காற்று நிரப்பப்பட்ட சிறு பிளாஸ்டிக் குமிழ் போன்ற அமைப்பைக் கொண்ட அந்த கவரை பார்த்ததுமே உங்களை அறியாமலே அந்த பபில்ஸை உடைத்து பொழுது போக்கியிருக்கிறீர்கள் என்றால் உங்கள் சிறு வயது ஆவ்சம்.

சரி அதற்கு ஏன் அந்த நிறுவனத்தை திட்ட வேண்டும்? 1957-ல் தொடங்கப்பட்டு தொடர்ந்து 58 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த Bubble Wrap-ன் தயாரிப்பை நிறுத்துவதாக சீல்டு ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக ibubble என்ற புதிய வகை Bubble Wrap-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவும் குமிழ் போன்ற அமைப்பு கொண்டதாகத்தான் இருக்கும். ஆனால் இதை உடைத்து விளையாட முடியாது.

போட்டி போட்டுக் கொண்டு உடைத்து விளையாடிய காலம் இனி இல்லை. கிட்டத்தட்ட 3 தலைமுறைகளாக குழந்தைகளின் ஆர்வத்தை ஈர்த்த அல்ப சந்தோஷமாக இருந்த ஒன்று, இன்று இல்லை என்று சொல்லவே, இப்போது குழந்தையாக இருப்பவர் முதல் அப்போது குழந்தையாக இருந்த இப்போதைய பெரியவர்கள் வரை அனைவரும்  சோகத்தில் உறைந்து போயிருக்கின்றனர்.

'அட போங்க பாஸூ இதுக்கெல்லாம் யாராவது ஃபீல் பண்ணுவாங்களா..?'ன்னு தோணும். ஆனா பண்றாய்ங்களே.

Popping Bubble Wrap என்ற பெயரில் ஃபேஸ்புக் கம்யூனிட்டியே இருக்கு. கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் மெம்பர்ஸாக இருக்கும் அந்த பேஜில், ஒவ்வொரு போஸ்டும் ஒரு ரகம். என் சூட்கேஸ் ஃபுல்லா Bubble Wrap சேர்த்து வச்சிருக்கேன் யாருக்கும் தரமாட்டேன், நான் நைட்டு Bubble Wrap-ஐ கட்டி புடிச்சு தான் தூங்குவேன், எனக்கு பாப்போஃபோபியா (பாப்பிங்கிக்கு அடிமையானால் இப்படிதான் சொல்வாங்களாம்) இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாரு, எனக்கு சந்தோஷமா இருக்கு, பாப்பிங் பண்றது மைண்ட் அண்ட் பாடிக்கு ரிலாக்‌ஷேசன் தருதுன்னு, யோகா டே அன்னைக்கு பேசிய மோடியவே மிஞ்சிட்டாங்க. மொத்தத்துல அது ஒரு Bubble Wrap வெறியர்கள் சங்கம்.

இது ஒரு பக்கம் இருக்க, Bubble Wrap-ன்னு பிளேஸ்டோர்ல கேமே இருக்குன்னா பாத்துக்கோங்க அதுக்கு எவ்வளவு ரசிகர்கள்னு. கேம் இருந்தாலும், நம்ம கையால ஒடச்சு விளையாடுற ஃபீல் வருமான்னு ஃபீட்பேக் வேற.

அடுத்தது YouTube. குறிப்பிட்ட நேரத்துக்குள்ள யாரு அதிகமா பபில்ஸை உடைக்குறாங்களோ அவங்கதான் வின்னர். இது தான் பாப்பிங் சேலஞ். இதுலயும் கிரியேட்டிவிட்டினு சொல்லி சைக்கிள், பைக்குன்னு கவர் மேல் விட்டு ஏத்தி உடைக்குறது, பால் குடிச்சுட்டு அமைதியா தூங்கிட்டு இருக்குற நாய், பூனைகளை எல்லாம் உடைக்கவிட்டு அத படம் புடிச்சி, அப்லோட் செஞ்சு காசு பாக்குறதுன்னு இதுக்கு ஒரு தனியா கும்பலே இயங்கிட்டு இருக்கு. இதெல்லாம் எதுக்காக? என்று ஒரு கேள்வி கேட்டா, Happiness is Popping Bubble Wrap-ன்னு மீம்ஸ் போடுறாய்ங்க.

இதெல்லாம் ஒருவகையில கிறுக்குத் தனமா தோணலாம், ஆனா உங்க அம்மா அப்பா கிட்ட கேட்டுப் பாருங்க, "இத யாரு அதிகம் உடைக்குறாங்கன்னு உங்க அத்தைக்கும் எனக்கும் போட்டியே நடக்கும். வீட்டுல, ரோட்டுலன்னு எங்க இருந்தாலும் எடுத்து சேர்த்து வச்சுப்பேன். அது ஒரு காலம்"ன்னு ஆட்டோகிராப் ஓட்டுவாங்க. சின்ன வயசுல அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி கூட சிறு புள்ளத்தனமா போட்ட சண்டையலாம் நினைவுபடுத்துற அந்த முட்ட கவரை பாக்கும் போது, உண்மையாகவே Happiness is Popping Bubble Wrap தான் தோணும் .

#RIPBUBBLEWRAP ஹாஷ் டாக்கில் பாப்பர்ஸ் பதிவிட்டுள்ள ஸ்டேட்டஸ்களில் தங்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டுச் சென்ற Bubble Wrap-க்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதில் சில கலங்க வைக்கும் ஸ்டேட்டஸ்களை கீழே காணலாம்.


அது சரி நம்ம ஊர்ல இதுக்கு என்ன பேரு... நாங்க யோசிச்சு பாத்தோம் சரியா தெரியல. உங்களுக்குத் தெரிஞ்சா #poppingvikatan #vikatan என்ற ஹாஷ்டாக்கில் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் போஸ்ட் பண்ணுங்க.

ibubble :

அதிகரித்து வரும் ஆன்லைன் வர்த்தகங்களால் பாதுகாப்பான மற்றும் சிக்கனமான பேகேஜிங் கவர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. Bubble Wrap கவர், சைஸில் கொஞ்சம் பெரியது. அதை சேமித்து வைக்கவே கிடங்குகள் தேவைப்படுகிறது. இருக்கும் விலைவாசியில் கிடங்குகளுக்கான வாடகையை நிறுவனங்களால் தர முடியவில்லை. விளைவு, இதன் விற்பனை சரியத் தொடங்கியது. இந்த நிலையை சமாளிக்க  சீல்ட் ஏர் நிறுவனம் கண்டுபிடித்துள்ள மாற்று தயாரிப்புதான் Ibubble. இந்த புதிய கண்டுபிடிப்பின்படி, பேக்கேஜிங்கின்போது மட்டும் காற்றை நிரப்பும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கான பம்பையும் அந்நிறுவனமே வழங்கிவிடும். இதனால் Ibubble- சேமித்து வைக்க பெரிய இடம் தேவைப்படாது. ஒரு Bubble Wrap- பண்டல் வைக்கப்படும் இடத்தில் 47 பண்டல் Ibubble-ஐ வைத்து விடலாம்.

- ரெ.சு.வெங்கடேஷ்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ