Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மிகவும் 'வாய்'ஸ் உள்ள மனிதர்! (வீடியோ)

'உலகிலேயே அகலமான வாய் கொண்டவர்' என்ற  உலக சாதனையைப் படைத்துள்ளார், மும்பையைச் சேர்ந்த தினேஷ் உபாத்யாயா (Dinesh Upadhyaya). இவர், ஒரு அறிவியல் ஆசிரியர்.

பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்ததும், உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக, வாய்க்குள் அதிகப் பொருட்களை அடக்கிவைத்து, வாயை அகலப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அவர் நினைத்தபடியே 92 பென்சில்கள், 79 திராட்சைகள், எரிய வைத்த 12 மெழுகுவத்திகள், ஐந்து கோல்ஃப் பந்துகள் என 48 சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார்.

தற்போது இவர், 208 சாப்ஸ்டிக்ஸ், ஆறு டேபிள் டென்னிஸ் பந்துகள், 14 கண்ணாடி டெஸ்ட்  டியூப்கள், 100 மார்பிள் கற்கள், 1,001 ஸ்ட்ராக்கள், 224 ப்ளேயிங் கார்ட்ஸ், 102 பென்சில்கள் என ஒரு பொருளை அதிக எண்ணிக்கையில் வாய்க்குள் அடைத்து வைத்து, அகலமான வாய் கொண்டவர் என சாதனை படைத்துவிட்டார்.


2010-ம் ஆண்டு ஒரு வீடியோவைப் பார்த்தார். அதில், அமெரிக்காவைச் சேர்ந்த Todd DeFazio என்பவர், தன் வாய்க்குள் 70 பென்சில்களை அடைத்து வைத்ததைக் கண்டார். அப்போது, இவரைவிட அதிகமான பென்சில்களை அடைத்து, சாதனைசெய்ய வேண்டும் எனத்  தீர்மானித்தார்.

ஆறு அடி, 6 அங்குலம் இருக்கும் இவர், தவறாமல் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் செய்வார். கன்னங்களை 10 நிமிடங்கள் வரை ரப்பர் போல இழுக்கும் பயிற்சியையும் செய்தார். முதல் முயற்சியில், 50 பென்சில்களை அடக்கினார்.

அவர் நினைத்தது போலவே, வாய்க்குள் ஒரு பொருளை அதிக எண்ணிக்கையில் அடக்கிய மனிதராக, கின்னஸ் புத்தகத்திலும், லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டிலும் இடம் பெற்றுவிட்டார்.

- என்.மல்லிகார்ஜுனா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ