Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'காசி' மரணம்: 10 கிராமத்தினர் சோகம்! (படங்கள்)

ரு காளையின் மரணம், பத்து கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்த காளைக்காக போஸ்டர், பேனர், வெடி என சராசரியாக ஒரு மனிதன் இறந்தால் செய்வதைபோலவே செய்து, தங்கள் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள் திருச்சி, சூரியூர் பகுதி கிராமமக்கள்.

திருச்சி, திருவெறும்பூரை அடுத்துள்ளது சூரியூர். இந்த ஊரில் உள்ள நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவிலில் கடந்த 18 வருடங்களுக்கு முன் பக்தர் ஒருவரால் கன்றாக விடப்பட்டதுதான் காளை காசி. அதன்பிறகு  ஊர்காரர்களின் பராமரிப்பில் கோவில் காளையாக வளர்ந்த காசி அந்த ஊரின் செல்லப்பிள்ளையாக வாழ்ந்தது. காளையை பராமரிக்க அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவர் பொறுப்பாளராக இருந்தார்.

சூரியூர் ஜல்லிக்கட்டு நடத்துவதில் மிகவும் பிரபலமான ஊர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வொரு வருடமும்  தொடர்ச்சியாக சூரியூர் ஊர் மைதானத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள, தமிழகம் முழுவதிலும் இருந்து மாடு பிடிவீரர்கள் வந்து கலந்துகொள்வார்கள். அப்படி கலந்துகொண்ட வீரர்கள் யாரிடமும் சிக்காத காளையாக இந்த காசி வலம் வந்தாக சொல்லி கண்ணீர் விடுகிறார்கள் ஊர் மக்கள்.

''களத்தில் சீரிப்பாயும் காசியை தொட்டுக்கூட பார்க்க முடியாது. களமிறங்கினால் காசி கில்லியாய் துல்லி குதிப்பான். சூரியூர் மட்டுமல்லிங்க, சிவகாசி, திண்டுக்கல், திருநெல்வேலி, புதுக்கோட்டை, அலங்காநல்லூர் என தமிழகம் முழுவதும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை காளை காசி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வாட்ச், பீரோ, சைக்கிள், தங்கம் என வாங்கிய பரிசுகள் ஏராளம்.

இப்படி கிராமத்தின் செல்லப்பிள்ளையாக கடந்த 18 வருடமாக வலம் வந்த காசி, கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று மாலை திடீரென காசி இறந்துபோனான். அவன் நடந்து வந்தால் நற்கடல் குடி கருப்பண்ணசாமி நடந்து வருவதைபோல இருக்கும். ஆனால், அவனுடைய இழப்பை எப்படி தாங்கப்போகிறோம் என்று தெரியவில்லை'' என அழுதார் ஊர் இளைஞரான பெரியசாமி.

காசி மரணமடைந்த செய்தி சுற்றுவட்டாரத்திலுள்ள சின்ன சூரியூர், கும்பகுடி, வீரம்பட்டி, காந்தலூர், எலந்தப்பட்டி, பட்டவெளி கிராமங்களில் உள்ள மக்களுக்கு தெரியவர பொதுமக்கள் அனைவரும் சாரைசாரையாக வந்து காளை காசிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இன்று மதியம் 2.30 மணியளவில் காசியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாம் அந்த ஊரிலிருந்து வெளியே வரும்போது காசி நினைவாக சுவர்களில் வரையப்பட்டிருந்த ஓவியம் நமக்கு விடைகொடுத்தது. காளை காசி வெறும் மாடல்ல. மண்ணில் உறங்கும் சூரியூர் மக்களின் செல்லப்பிள்ளை என்பதை உணர்ந்தோம்.

சி.ஆனந்தகுமார்,

படங்கள்: தே.தீட்ஷித்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ