Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒண்ணாப் போலாம்... ஒண்ணாப் போலாம்!

ண்டன் நகரை சேர்ந்த பிரபல விமான இண்டீரியர் டிசைனிங் கம்பெனி ஜேபிஏ,  விமான பயணிகளை கவரும் விதமாக அவ்வப்போது இருக்கைகள், ஓய்வு அறைகள், விமான நிலைய ஹோட்டல்,  பணியாளர்கள் தங்குமிடம் என அனைத்திலும் ஏதேனும் வித்தியாசத்தை புகுத்தி வருவார்கள்.

ஜேபிஏ டிசைனரால் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா என பல விமான நிலையங்களின் ஓய்வு அறைகளும், விமானங்களும் கிட்டத்தட்ட டூரிஸ்ட் தளமாகவே மாறி காட்சியளிக்கிறது.

2013- ம் வருடம் இவர்கள் சீனாவின் விமானங்களில் பொருத்திய பிசினஸ் க்ளாஸ் சீட்,  உலக ஃபேமஸ். தற்போது அதற்கும் ஒருபடி மேல் சென்று இவர்கள் உருவாக்கிய சமீபத்திய வரவான செல் வடிவ விமானம் மற்றும் ஜெட் இருக்கைகள்,  பயணிகளை 'ஓ' போடவைத்திருக்கிறது.

விரைவில் உலகின் ஹைஃபை விமானங்களில் கொண்டுவரப்பட உள்ள இந்த செல் இருக்கைகள்,  கலர்ஃபுல்லாக காட்சியளிப்பதோடு, பயணத்தை தனிநபர் அல்லாத ஒரு குழுவாக உற்சாகத்திற்கு மாற்றும் என இந்நிறுவனத்தின் செயலாளர் ஆடம் ஒயிட் தெரிவித்துள்ளார். 3டி ரேடிக்கல் ஸ்டைலில் இருக்கும் இந்த இருக்கைகள், தற்போதைய சாதாரண இருக்கைகளை விட பல ஆச்சர்யங்களை கொண்டுள்ளது. ஒரே இடத்தில் உணவுகளை எளிமையாக கையாளுதல், தனி வீடியோ ப்ளேயர் மற்றும் ஏசியை கட்டுபடுத்திக்கொள்ளும் வசதி என பயணிகளின் லைக்ஸ்களை அள்ளுகிறது.

எல்லாவற்றிற்கும் மேல் குழுவாக வரும் பயணிகள், பயணத்தின் போதும் அது குழு உற்சாகத்தோடு பயணிக்கும் நிலையை உருவாக்கும் என்கிறார் ஒயிட். அதாவது பழைய சாதாரண இருக்கைகளில் ஒரே நேரத்தில் இருவரோ அல்லது மூவரோதான் பேசிக்கொண்டு செல்ல முடியும். ஆனால் ஜேபிஏ வடிவமைத்துள்ள விமானத்தில் ஒரே இடத்தில் ஆறு பேர் வரை அமர்ந்து உரையாடியபடி செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

எனினும் ஒவ்வொரு பயணியின் ப்ரைவசியும் இதில் பாதுக்கப்படும்படியான, அதே சமயம் சேர்ந்த பயணம் என விளக்கம் கொடுக்கின்றனர் ஜேபிஏ நிறுவனத்தினர்.

விமானப் பணிப்பெண்ணும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் ஆறு பேருக்கு உணவளிக்க முடியும். அதேபோல் பழைய இருக்கையில் மடியில் வைத்து உணவு உண்ணுவது போல் அல்லாமல் சைடில் இருக்கும் ஸ்லைடை இழுத்து இன்ஸ்டண்ட் டைனிங் டேபிளாகவும் மாற்றிக் கொள்ளலாம் இதில்.

எல்லாவற்றிற்கும் மேல் பின்பக்கம் லைட்டாக இழுத்து விட்டால் ஹாயாக ஒரு தூக்கமும் போடலாம்.

ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல...

- ஷாலினி
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close