Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு மாதம் பிச்சை எடுத்தால் 30000 ரூபாய் சம்பாதிக்க முடியுமா? [வீடியோ]

நகர்புறத்தில் ஓரளவுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு செல்லும் படித்த இளைஞர்கள், 3 அல்லது நான்கு வருட அனுபவம் கொண்டவர்களுக்கே மாதம் 30000 சம்பளம் என்பது கனவாகவே இருக்கிறது. ஆனால் பிச்சை எடுத்தால் போதும் மாதம் 30000 சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? ஆனால் பிச்சை எடுத்தால் மாதம் 30000 ரூபாய் சம்பாதிக்கலாம் என இண்டி வைரல் எனும் யூ-ட்யூப் சேனல் வீடியோ ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. வீடியோ வெளியான ஒரே நாளில் 6 லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் பிச்சைக்காரர் போல் உடையணிந்து பிச்சை கேட்கிறார். 2 மணி நேரம் பிச்சை எடுக்கும் அவர் 200 ரூபாய்களை சம்பாதிக்கிறார். அப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வீதம் மாதம் 30000 ரூபாய் சம்பாதிக்க முடியும் என்கிறது அந்த வீடியோ.வீடியோவின் முடிவில் இது போன்ற இரக்கம் காட்டி தவறான உதாரணமாக இருக்காதீர்கள் என்று முடிவடைகிறது.

சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிச்சைக்காரர்களுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை அளிப்பதாக கூறினார். அதனை அவர்கள் மறுக்க பின்னர் தொகையை 10000 என உயர்த்தினார் அப்போதும் 300 பிச்சைக்காரர்கள் அதனை நிராகரித்தனர். ஒருவேளை அவர்களது நிராகரிப்புக்கு காரணம் அவர்கள் இந்த தொகையை விட அதிகமாக பணம் ஈட்டுவதாகக்கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது நடந்த சில நாட்களில் இந்த வீடியோ வெளியாகி இருப்பது மக்களை யோசிக்க வைக்கும் விஷயமாக மாறியுள்ளது.

வீடியோ பதிவு
 

-ச.ஸ்ரீராம்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close