Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்ளங்கையில் 3டி!

வ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு. ஒருவர், பேப்பரில் 3டி ஓவியம் வரைந்து அசத்தினால், இன்னொருவர் தரையில் 3டி ஓவியங்கள் வரைந்து ஆச்சர்யப்பட வைப்பார்.

அதுபோலவே, இத்தாலி ஓவியர் லூகா லூசே (Luca Luce)வும், தன்  உள்ளங்கையில் அழகழகான 3டி ஓவியங்களை வரைந்து, அனைவரையும் வியக்கவைக்கிறார். புகைப்படங்களில் இருப்பது போலவே, மிகக் கச்சிதமாக இருக்கும் லூகா லூசேவின் உள்ளங்கை 3டி ஓவியங்களைச்  சட்டென்று பார்த்தால், உருவங்கள்  உள்ளங்கையைக் கிழித்துக்கொண்டு வெளியே வருவது போல நம்மை மிரட்டுகின்றன. இன்னொரு ஓவியத்தில், நான்கு கண்களுடன் ஒரு உருவம் லூகா லூசேவிடம் பேசுவது போல காட்சியளிக்கிறது. இப்படி வரைய, லூகா எடுத்துக்கொள்ளும் நேரம் 30 நிமிடங்களே.

டி.வி மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கும் லூகாவுக்கு, சிறு வயதிலிருந்தே 3டி ஓவியங்கள் மிகவும் பிடிக்குமாம். ஐந்து வயதிலிருந்து வரையத் தொடங்கி, பெரியவன் ஆனதும் கிராஃபிக்   டிசைனர் பணியில் சேர்ந்தார். அதில் இருந்து கொண்டே, மேக்கப் படிப்பையும் முடித்தார்.

கடந்த ஆண்டிலிருந்துதான் தன் உள்ளங்கையில் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தார். இப்போது, இவரது 3டி ஓவியங்களைப் பார்த்த பலர், இவரின் ரசிகர்களாகிவிட்டனர். அவர்கள், தங்களின் கைகளிலும் 3டி ஓவியங்களை வரையச் சொல்லி, கியூவில் நிற்கிறார்கள்.

-என்.மல்லிகார்ஜுனா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close