Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுவிலக்கை எதிர்க்கும் குச்சனுார் சோனை கருப்பண்ணசாமி!

திருமணத்தடை, பொருளாதாரத்தடையை நிவர்த்தி செய்வது திருநள்ளாறு என்ற  பரிகார ஸ்தலம். பொன், பொருள் வேண்டிதல் நிறைவேற்றும் ஸ்தலமாக விளங்குகிறது குச்சனூர் ஆலயம்.

சுயம்பாக வந்ததனால் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரின் கண்களும் சேர்ந்து 6 கண்களுடன் காட்சி அளிக்கிறார் சனீஸ்வர பகவான் இங்கு. சுரபி நதிக்கரையில் அமைத்து இருக்கும் இந்த ஸ்தலத்தின் எல்லை தெய்வமான சோனை கருப்பண்ணசாமிக்கு பொங்கல் விழா நேற்று நடந்தது.

திருமணத்தடை, குடும்ப பிரச்னைகள் நீங்க சோனை கருப்பண்ணசாமியை வேண்டுகின்றனர். அவ்வாறு தங்கள் வேண்டுதல் நிறைவேறும்போது அதற்கு  பரிகாதரமாக மது பாட்டில்களை படைத்து மகிழ்வர். ஆடி நான்காவது சனிக்கிழமையை அடுத்த திங்கள்கிழமை இவ்விழா நடைபெறும்.

நேற்று நடந்த இந்த விழாவில், கருப்பண்ணசாமிக்கென்று விசேஷ பூஜை நடைபெற்றன. அப்போது கருப்பண்ணசாமிக்கு படையலாக 1500 மதுபாட்டில்களும், 27 ஆட்டு கிடாக்கள், சேவல்கள் படைக்கப்பட்டன. பக்தர்கள் அளித்த மதுபான பாட்டில்களை சன்னதிக்குள் அர்ச்சகர் அடுக்கி வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினார். சுவாமியின் காலடியில் உள்ள கலயத்தில் மதுபானங்களை ஊற்றினார்.

அக்கலயத்தின் அளவு சிறியதே ஆகும். ஆனால் மதுபானங்களை ஊற்ற ஊற்ற பூமிக்குள் சென்றுவிடும் என்பது ஆச்சர்யமானது. மேலும் பக்தர்கள் வழங்கிய ஆடு, கோழிகள் சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது.

வேண்டுதல் நிறைவேறும்போது ஆட்டு கிடா, கோழி , மதுபாட்டில்கள் வழங்குவர். இந்த நேரத்தில் சுவாமியின் கண்கள் சிவந்து இருக்கும். மதுவின் வாடை சிறு துளிக்கூட இருக்காது என்பதை ஆச்சர்யம் விலகாமல் கூறுகின்றனர் பக்தர்கள்.

- ச. மோகனப்பிரியா ( மாணவப் பத்திரிக்கையாளர்)
படங்கள்: வி. சக்தி அருணகிரி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close