Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லைக்ஸ் அள்ளும் முயல் மியூசியம்!

முயல் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். அது துள்ளிக் குதித்து ஓடும் காட்சி, தனி அழகுதான். அதுவும் ஒரே இடத்தில் 30,000 முயல்களைப் பார்த்தால் எப்படி இருக்கும்? அந்த சுவாரஸ்யத்தைத் தெரிந்துகொள்வோமா...

'ஃபன்னி மியூசியம்', அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள Pasadena நகரில் உள்ளது. மியூசியத்தின் உள்ளே எங்கு பார்த்தாலும் முயல் பொம்மைகள் தான். இதனாலேயே, ஒரே இடத்தில் அதிக முயல் பொம்மைகளைக் கொண்ட மியூசியம் என கின்னஸில் இடம் பெற்றுள்ளது 'ஃபன்னி மியூசியம்'.

மீன் பிடிப்பது போலவும், டாக்டர், வக்கீல், போஸ்ட்மேன், போலீஸ், கடிகாரங்கள், பென் ஸ்டேண்டு, ஷர்ட், ஷூ என இருப்பவை எல்லாமே, முயல்கள் வடிவில் தான். இந்த மியூசியத்தின் முகப்பில், முயல் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் 15 அடி உயரச் செடி, பார்வையாளர்களை மிகவும் கவர்கிறது. மண், கண்ணாடி, பீங்கான்களில் செய்த முயல் பொம்மைகளும் அழகு.

இந்த பிரமாண்டமான ஃபன்னி மியூசியம் உருவாக... candace frazee, steve lubanski இந்த இருவருமே காரணம். இவர்கள், ஒருவர் மீது ஒருவர் அன்பைத் தெரிவிக்க, 1993ல் இருந்து தினமும்  ஒரு முயல் பொம்மையைப் பரிசாகப் பரிமாறிக் கொண்டனர்.

எக்கச் சக்கமான முயல் பொம்மைகள் சேர்ந்துபோகவே, 1998ல் இந்த பொம்மைகளைக் கொண்டே மியூசியம் ஆக்கிவிட்டனர். வித விதமான முயல்களைப் பார்ப்பதற்கென்றே  பார்வையாளர்கள் தினமும் இங்கு குவிகிறார்கள். மேலும், முயல் பொம்மைகளோடு புகைப்படங்களை எடுத்து, தங்களின் சோஷியல் மீடியாவில் போட்டு லைக்குகளை அள்ளுகிறார்கள்.

- என்.மல்லிகார்ஜுனா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close