Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிவிட்டரில் தாஜ்மஹால்!

நேற்றுப்  பிறந்த குழந்தையிலிருந்து, அய்யோ பாவம்னு சொல்ற பாட்டி வரைக்கும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டு ஆகி, அவார்டுகளை  அள்ளிக்கொண்டு போகிற வைரல் யுகம் இது. ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து  அனிருத் காலம் வரை `காதல்` கொண்டாடப்படுகிற ஒன்று.

இந்தக்  கலியுக காலத்திலும், காதலுக்கும், காதலர்களுக்கும் நினைத்தாலே இனிக்கும் நினைவுச் சின்னமாக நேற்று, இன்று, நாளைனு ஹிட் அடிப்பது…….சாட்சாத் தன் காதலுக்கு ஷாஜகான் கட்டின தாஜ்மஹால் தான். இன்றும் என்றும் சுற்றுலா பயணிகளை  தன் பக்கம் ஈர்க்கும் தாஜ்மஹாலின் அடுத்த அவதார் டிவிட்டர் பக்கத்தில்.

உத்திரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், தாஜ்மஹாலுக்கான அதிகாரப்பூர்வமான, டிவிட்டர் பக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார். அக்கவுண்ட் ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே  ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்ஸ் சேர்த்து ‘எப்பூடி?’ என கண் சிமிட்டுகிறது  இந்த என்றும் இருக்கும் காதல் சின்னம்.

உலக நினைவு சின்னங்களில், முதன் முறையாக டிவிட்டர் அக்கவுண்ட் ஆரம்பித்து தட தட என அதிரடி காட்டியுள்ளது தாஜ்மஹால். அகிலேஷ் யாதவ், தன் குடும்பத்துடன் தாஜ்மஹால் முன் எடுத்த படத்தை இதில் பதிவேற்றியுள்ளார்.

டிஜிட்டல் உலகத்தில் கால் பதித்துள்ள தாஜ்மஹாலுக்கு டிவிட்டர் வாசிகள் ஆஹா ஓஹோ வரவேற்ப்பு அளித்து வருகின்றனர். தாஜ்மஹால் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களையும், மெஸ்மரைசிங் புகைப்படங்களையும் எதிர்ப்பார்ப்பதாக தங்கள் கருத்துகளை பதிந்துள்ளனர்.

தாஜ்மஹாலுடனான தங்களது நினைவுகளை பகிர்ந்துள்ள வலைதள வாசிகள், டிவிட்டரில் தாஜ்மஹால் ஷாக் சர்ப்பரைஸ் என தெரிவித்துள்ளனர். பார்த்தவுடன் உள்ளிழுக்கும் மாயமும், காலங்கள்
கடந்து நின்று காதல் கதை சொல்லும் வெண் தேவதையை இனி டிவிட்டரிலும் ரசிக்கலாம், பகிரலாம்.

எஸ்.ஆனந்தபிரியா(மாணவப் பத்திரிக்கையாளர்) 

MUST READ