Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களே! நீங்க வைக்குற பொட்டுல அயோடின் இருக்கா?

இந்தியாவில் அயோடின் குறைபாடு என்பது மிகப்பெரிய பிரச்னையாகவும், குறிப்பாக பெண்களில் அதிகம் காணப்படும் குறைபாடாகவும் உள்ளது. இதற்கு காரணம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் அயோடின் தன்மை குறைவாக இருப்பதுதான்.

ஏழை மக்கள் உணவில் அயோடின் குறைபாடு என்பது மிக அதிகமாக காணப்படுகிறது. இதனை எளிமையான முறையில் தீர்க்கவும், சிறப்பான முறையில் தீர்வு காணவும் மஹாராஷ்ட்ராவில் புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது க்ரே விளம்பர ஏஜென்ஸியின் 'க்ரே ஃபார் குட்' அமைப்பு.

க்ரே அமைப்பின் , சிங்கப்பூரின் தலைமை அதிகாரி அலி ஷபாஸின் ( இந்தியாவில் பிறந்தவர்)  சிந்தனையில் உருவானதுதான் இந்த திட்டம். மருத்துவ துறையில் அணியும் பொருட்கள் மூலம் ஏதேனும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்க வேன்டும் என்ற யோசனையில் இருந்தபோது உதித்ததுதான் ''பெண்கள் வைக்கும் பொட்டில் அயோடினை சேர்த்து அளித்தால் அயோடின் குறைபாட்டை தடுக்கு முடியும்'' என்ற கண்டுபிடிப்பு.

இந்திய பெண்களில் பெரும்பாலானோர் இந்து மதத்தின் பழமை வாய்ந்த பழக்கங்களில் ஒன்றான பிந்தி எனக் கூறப்படும் பொட்டு வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இந்த கிராமங்கள் துவங்கி நகரம் வரை விரிவடைந்துள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ள நினைத்த அலி ஷபாஸ், இதனை அயோடின் குறைபாட்டுக்கு தீர்வாக மாற்ற வேண்டும் என்று யோசித்தார்.

அதன் படி ''வாழ்க்கையை பாதுகாக்கும் பொட்டு' என்ற வாசகத்துடன் ஒரு திட்டத்தை மஹாராஷ்ட்ராவின் மேற்கு பகுதிகளில் துவங்கியது க்ரே ஃபார் குட் அமைப்பு. அங்குள்ள மலைப்பகுதி பெண்களிடம் அயோடின் குறைபாடு அதிகமாக காணப்பட்டதையடுத்து அங்குள்ள மக்களிடம் அயோடின் கலந்த பொட்டை வழங்கியது க்ரே.

பொட்டில் என்ன சிறப்பு?

இந்த பொட்டில் என்ன சிறப்பு என்றால் பொட்டுகள் தயார் செய்யப்பட்டவுடன் ஒவ்வொரு பொட்டிலும்  150-200 மைக்ரோகிராம் அளவுள்ள அயோடின்  சேர்க்கப்படுகிறது. அதன் மூலம் ஒருநாளைக்கு தேவைப்படும் 12 சதவிகித அயோடின் அவர்களுக்கு கிடைக்கிறது. தோல் வழியாக அயோடின் உடலுக்குள் பரவி அவர்கள் உடலில் அயோடின் அளவை அதிகரிக்க செய்கிறது.

இதனை சோதித்த பின்பே மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளது க்ரே அமைப்பு. எந்த வித தோல் பாதிப்பையும் இது ஏற்படுத்தாது என்று ஆய்வு முடிகள் கூறுகின்றன. இந்த அயோடின் கலந்த பிந்திகளை தயாரிக்க தல்வார் என்ற பிந்தி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து என்ஜிஓக்கள் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அயோடின் குறைப்பாட்டால் ஏற்படும் பிரசவகால பிரச்னைகள், நினைவு திறன் போன்றவை இதனால் தடுக்கப்படும் என்கிறது அமைப்பு, 2016ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அயோடின் குறைவான மக்களுக்கு தெருக்கடைகளில் கிடைக்கும் அளவுக்கு இந்த பொட்டுகளை கொண்டு செல்ல இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இனிமே அயோடின் குறைபாடு உள்ளவர்களிடம் நீங்க வைக்குற பொட்டுல அயோடின் இருக்கானு கேக்கலாம். பெண்களோட ஆரோக்கியத்துக்கு இந்த புள்ளி ஒரு துவக்கமாக இருக்கலாம்.


அயோடின் கலந்த பொட்டு பற்றிய வீடியோ இணைப்பு:

 

 

Source: time.com

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ