Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பூமியிலிருந்து 20 கிலோ மீட்டர் உயரத்திற்கு பிரமாண்ட கோபுரம்!

ங்ககிட்ட யாராவது வந்து,  "ஹே... நீ மேல போறியா..?" னு கேட்டா, "யாரப் பாத்து சாகப் போறியானு கேட்கிற?" அப்படின்னு கோவப்படாதீங்க மக்களே... ஏன்னா இன்னும் கொஞ்ச வருஷத்துல, அந்த வார்த்தைக்கு வேற ஒரு பெரிய அர்த்தம் வரப்போகுது.

 

மனிதன் தொழில்நுட்பத்த வச்சு இது வரைக்கும் அடைஞ்ச உயரம் போதாதுனு, இப்ப அதுக்கும் மேல ஓர் உயரமான இடத்துக்குப் போகப்போறான். ஆமாம், உலகத்துலயே உயரமான இடத்துக்கு. சுற்றி வளைக்காமா விஷயத்துக்கு வர சொல்றீங்களா...?வாங்கபோகலாம்.

'புர்ஜ் கலிஃபா துபாய்'-  828m உயரம் கொண்ட இதுதான் இப்ப இருக்குற கட்டடங்கள்ல உயரமான கட்டடம். ஆனா, புர்ஜ் கலிஃபா கட்டடத்தைப் பார்த்து, "நீயெல்லாம் எனக்கு சின்னப் பையன்" மாதிரி அப்படின்னு சொல்றதுக்காக ஒரு கட்டடம் வருது அதான் தோத் எக்ஸ் டவர் (ThothX tower).

தோத் என்பது ஓர் எகிப்திய தெய்வத்தோட பெயர். அந்த பெயர் கொண்ட இந்த கட்டடத்தோட உயரம் எவ்வளவு தெரியுமா 20 கி.மீ. கனடாவை சேர்ந்த பிரண்டன் குயைன் என்பவர்தான் இந்த உயரமான கனவுக்கு சொந்தக்காரா். இது பற்றி அவர் சொல்லும்போது, "இதை கட்டடம்னு சொல்ல முடியாது. வேணும்னா உலகத்துலேயே உயரமான லிஃப்ட் அப்படினு சொல்லலாம்" என்கிறார். ஆமாம், இதை அவங்க கட்டடமா பயன்படுத்தப்போறது இல்லயாம், வானத்துக்கு போக லிஃப்டா பயன்படுத்தப் போறாங்களாம்!

இந்த திட்டத்தோட முக்கிய நோக்கமா இவங்க சொல்றது விண்வெளி பயணம். நாம் விண்வெளிக்கு அனுப்புற ராக்கெட்டுகளை இந்த லிஃப்ட்டோட உயரத்துலேர்ந்து அனுப்புறதுதான் அவங்களோட மாஸ் திட்டம். இந்த திட்டத்தின் மூலமா கிட்டத்தட்ட 30% சதவிகித விண்வெளி பயண செலவு குறையுமாம். அதுமட்டும் இல்லாம, சில செயற்கை கோள்களோட வேலையை இது காலிபண்ணிடுமாம்.

வானத்துல பறக்குற ஃபிளைட் இறங்கி பெட்ரோல் போடுறது, ஒரே கட்டமா செயற்கை கோள்களை சுற்றுவட்டப் பாதையில ஏவுறது என இவங்க வச்சிருக்கிறது எல்லாமே மெகா சைஸ் திட்டங்கள்தான். இந்தக் கட்டடத்த இதுவரை இல்லாத வகையில மிகவும் வலுவானதா கட்ட திட்டமாம். டைமண்ட் நேனோ முறைப்படி இந்தக் கட்டடத்த கட்டப் போறாங்களாம். இதுதான் உலகத்துலயே வலுவான கட்டடமாகவும் இருக்கும் என்கிறார்கள். ஆனா, இந்தக் கட்டடம் வர இன்னும் நிறைய வருஷம் காத்திருக்கனுமாம்.

ஒருவேளை இந்தக் கட்டடம் வந்தா, டைரக்டர் ஷங்கர் அங்க ஒரு பாட்டு கூட எடுக்கலாம். என்ன பாஸு கதையா விடுறீங்க, இவ்ளோ பெருசாலாம் லிஃப்ட் கட்ட முடியாது அப்படினு சொல்றவங்களுக்கு ஒண்ணு சொல்லணும். உலகம் அசாத்தியமானது என்று நினைத்து, ஒவ்வொன்றையும் மனிதன் சாத்தியமாக்கி இருக்கிறான்....!

- சியாம் சுந்தர்
(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ