Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செவ்வாய் கிரகத்தில் உங்கள் பெயர்!- வாய்ப்பளிக்கும் நாசா

சின்ன வயசுல, ஏதாவது புகழ்பெற்ற இடங்களுக்கு போன அடையாளமா, நம்ம பேர கிறுக்கி வச்சிட்டு வருவோம். இப்பொழுது நாம் போகாமலேயே செவ்வாய் கிரகத்திற்கு (Mars) நம் பெயர் சென்றடையும் வாய்ப்பைத் தருகிறது நாசா.



நாசாவின் ‘Send your name to Mars: Insight’ போட்டியில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த வருடம் நாசா ஏவப்போகும் ‘இன்சைட் மார்ஸ் லேண்டர்’ எனும் விண்கலத்தில் பொருத்தப்படும் ஒரு சிலிக்கான் மைக்ரோசிப்பில், தேர்ந்தெடுக்கப்படுபவரின் பெயர் இடம்பெறும் என அறிவித்திருக்கிறது நாசா.

இன்சைட் விண்கலம் மார்ச் 2016ல் கலிபோர்னியாவிலுள்ள வாண்டென்பர்க் விமானப்படை தளத்திலிருந்து ஏவப்பட்டு, செப்டம்பர் 2016 ல் செவ்வாய் கிரகத்தை அடையும். கிரகத்தின் உட்பகுதியை புலனாய்வு செய்வதே இதன் நோக்கம் என்கிறது நாசா.

இந்த மாதிரியான போட்டியை இரண்டாவது முறையாக நடத்துகிறது நாசா. டிசம்பர் 2014ல் செலுத்தப்பட்ட ஓரியன் விண்கலத்தில் 1.38 மில்லியன் பெயர்களைத் தாங்கிய ஒரு மைக்ரோசிப்பும் பயணித்தது.

இன்சைட் போட்டியில் கலந்து கொள்வதற்கான படிவங்கள் செப்டம்பர் 8ம் தேதி வரை ஏற்கப்படுகின்றன.

போட்டியில் கலந்துகொள்ள இந்த உரலியை சொடுக்கவும்:
http://mars.nasa.gov/participate/send-your-name/insight/index.cfm

-அ.நிவேதா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ