Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் ஓர் ஆச்சரிய நூலகம்!

சென்னை தினத்தை அன்று மட்டும் கொண்டாடி விட்டு போகாமல், உண்மையிலேயே நம் நகரின் பெருமைகளை அறிந்து, காப்பாற்றி போற்றி வேண்டிய விஷயங்களுக்காக உழைக்க, நுங்கம்பாக்கம் காலேஜ் ரோட்டில் அமைதியாய் நின்றுக்கொண்டிருக்கும் 'மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி' யை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

1812  ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி' நூலகத்தில்,  தற்போது 83,000 புத்தகங்கள் உள்ளன. அப்போதைய கூவ நதியோரத்தில், இந்நூலகத்தின் அருகில் இருந்த போர்ட் செயின்ட் ஜார்ஜ் கல்லூரியின் முக்கியமான ஆய்வு நூலகமாக இது இருந்திருக்கிறது. சமீபத்தில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த கட்டட கலைஞர் ஒருவர் இந்நூலகத்தை ஆய்வு செய்ய வந்தபோது,  ராஜஸ்தானிய கட்டட முறைப்படி கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தை பார்த்து வியந்துபோனாராம். சென்னை தட்பவெப்பதிற்கு ஏற்றவாறே அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தில்,  இயற்கையாகவே தேவையான அளவு சூரியவெளிச்சம் உள்ளே வருமாறு கட்டப்பட்டுள்ளதாம். மழை, வெப்பம் என எந்த சூழ்நிலையிலும் தாங்கும் அளவு சிறப்பான கட்டட வேலைப்பாட்டை கொண்டுள்ளது. உள்ளே வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்கு வெளிபுற தட்ப வெப்பத்தால் எவ்வித பாதிப்பும் வரமுடியாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது  இந்த கட்டடம்.

இந்நூலகத்தில், மிகவும் பழமையானதான அரிஸ்டாடிலின் ஒரு லாடின் மொழி புத்தகம் முதல் (1619இல் வெளியிடப்பட்டது) இப்போதைய ஹாரி பாட்டர் வரை பல வகையான புத்தகங்கள் உள்ளன. கையெழுத்து புத்தகங்களும், மிகவும் அரிதான புகைப்பட தொகுப்புகளும் கூட உள்ளன. ஆனால் அவற்றில் பத்தாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் மிகவும் மோசமான  அல்லது கிழிந்த நிலையில் உள்ளன. இவ்வாறு அழிவின் விளிம்பில் இருக்கும் புத்தகங்களை பாதுகாக்க அந்தந்த புத்தகத்தின் நிலையை பொறுத்து 3000 முதல் 5000 வரை செலவாகும். தென்னிந்தியாவின் பழமையான மற்றும் பெருமை வாய்ந்த இந்நூலகத்தில் இப்போதைக்கு 195 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். சரியான பராமரிப்புக்கு தேவையான உதவி கிடைக்க இன்னும் நிறைய பேர் உறுப்பினர்களாக இணைய வேண்டும் என்கிறார் நூலகர் உமா மகேஸ்வரி.

ஒரு நூலகம் என்பது வெறும் புத்தகங்களின் இருப்பிடம் மட்டும் அல்ல. அது பல மனிதர்களின் கனவுகளையும், கற்பனைகளையும் தன்னகத்திலே கொண்டது. ஒரு நல்ல புத்தகத்தை ஆழமாக படிப்பதற்கு ஏற்ற அமைதியான சூழலை ஒரு நூலகம் தருவது போல் வேறு எதுவும் தர இயலாது. நூலகங்களையும் புத்தகங்களையும் பாதுகாப்பது  குறித்த அவசியத்தையும்  விழிப்புணர்வையும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் எடுத்து சொல்ல வேண்டியது நமது கடமை.

இந்த வருட மெட்ராஸ் வார கொண்டாட்டங்களோடு, நகரில் இது போல பழமையானதாக இருக்கும் புராதான சின்னங்களையும் இடங்களையும் இனி பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்!
 
கோ. இராகவிஜயா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ