Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சீக்' கார சென்னை.. சிங்கார சென்னை ஆகிறது இப்போது!

டைபாதைகளில் நடப்பது போன்ற துயரம் வேறு இல்லை!  சுவரெல்லாம் எச்சில், சிறு நீரின் வாடை வாய்பிளந்து நிற்கும் பள்ளங்கள் இத்தனையும் பார்த்தால், பேசாமல் நடைபாதையில் நடப்பதற்கு பதில் நடு ரோட்டிலேயே நடக்கலாம் என்று தோன்றும். அத்தனை அசௌகர்யங்கள்.

இவைபோதாது என்று, 'எங்கெங்கு காணினும் அரசியல் சுவரொட்டிகளடா!'என்பதை போல லேயர் லேயராக சுவரொட்டிகள்.

பெயின்ட் பாக்ஸ் எனப்படும் ஒரு அரசு சாரா அமைப்பினர் சென்னையின் சுவர்களை வண்ணமயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நம்ரதா ரத்னம் , தேஜாஸ் ராமரத்தினம், ஹரி ஹரன் இவர்கள் மூவரும்  சமூக பிரச்னைகளை எடுத்துக்கூறும் தெரு நாடகங்களை நடத்தி வந்தனர். அப்படி செய்தபோது அவர்களுக்கு தோன்றியதுதான் இந்த பெயின்ட் பாக்ஸ் திட்டம். சாதாரணமாக சுவர்களில் சரமாரியாக சுவரொட்டிகளும், எச்சில் கறைகளையுமே காண முடியும். வரையப்படும் விளம்பரங்கள் போய், சுவரொட்டிகள் என்று வந்ததோ அன்றிலிருந்து சுவர்களின் நிலைமை மோசமாகி விட்டது. இதனால் மாடுகளுக்கு மட்டுமே மகிழ்ச்சி. அவைகளுக்கு சாப்பிட பேப்பர் கிடைக்குதே. பெரும்பாலும் சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன சென்னையின் சுவர்கள்.

இந்நிலையில் மெட்ராஸ் தினத்தை ஒட்டி பல சுவர்களை அழகுப்படுத்த முடிவு எடுத்துள்ளனர் அவர்கள். இது வரையிலும் 20 க்கும் மேற்பட்ட சுவர்களில் ஓவியங்கள் வரைந்துள்ளனர். இவர்களின் சிறப்பான பணியை பார்த்த சென்னை மாநகராட்சி, இவர்களை சில திட்டங்களில் உள்ளே கொண்டு வந்துள்ளது.

இவர்கள் வார இறுதிகளில் மட்டுமே சுவர்களில் வேலை செய்வார்கள். காரணம்? அதிகமான மக்களால் வார இறுதிநாட்களில் மட்டும்தான்  வர இயலும்.

வெறும் ஓவியங்கள் மட்டும் வரையாமல், அழகான கவிதை வரிகளையும் எழுதுகின்றனர். இவை எந்த பெரிய கவிஞரும் எழுதியது இல்லை, சாமானிய மக்களின் குரல். யார் வேண்டுமானாலும் கவிதைகளை அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்பட்டால் அவை சுவரில் எழுதப்படும். அதை தீட்டும் போது கவிதை வாசிப்பும் நடைபெறும். அடுத்தபடியாக சிறு நாடகங்களும் நடத்த உள்ளனர்.

அனைவருக்கும் சுவர்கள் தங்கள் சொத்து என்ற எண்ணம் வர வேண்டும். அப்படி வந்துவிட்டால் அதனை பராமரிக்க முன் வருவோம். இதனை நோக்கியே உழைக்கிறது பெயிண்ட் பாக்ஸ் குழு. சென்னையில் நீங்கள் அழகான சுவர்களை கண்டு மகிழ்ந்தால், இவர்களுக்கே அந்த நன்றி போய் சேரும்.

- கிருத்திகா மாடசாமி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ