Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெங்களூரில் மிக பிரபலமான வேலைகள்! (Sponsored)

மிக புத்திசாலியான இளம் தலைமுறையினர் மற்றும் வேலை தேடுவோரை காந்தமாக ஈர்க்கும் நகரமாக மாறி வருகிறது பெங்களூரு. இந்தியாவின் ஐடி நகரமாக திகழும் பெங்களூரில், ஏராளமான மற்ற முன்னணி தொழில் நிறுவனங்களும், அதன் துணை நிறுவனங்களும் இந்த மாபெரும் ஐடி மையத்தின் நிழலில் வளர்ச்சியடைந்து வருகின்றன. ஏராளமான அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் மற்றும் படிப்பு முடிந்தவர்கள் நல்ல வேலை வாய்ப்பை தேடியும், அவர்கள் தேடுகிறபடியான வாய்ப்புகள் கிடைப்பதாலும் இந்த நகரை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். வேலை தேடுவோர்களுக்கு பெங்களூரு ஏராளமான வேலை வாய்ப்பினை கொண்டுள்ளது. நிறுவனங்களின் தேவையைப் பொறுத்து இந்த வேலைகள் தொடர்ந்து பெருகுகின்றன அல்லது குறைகின்றன. இதுகுறித்து மேலும் தகவல் அறிய http://www.jobtonic.in/bangalore/jobs/

பெங்களூரில் தற்போது பிரபலமாக உள்ள வேலைகள்:

பெங்களூரு வேலை சந்தையில் தற்போது கைப்பற்றிக்கொள்ளக் கூடிய வகையில் பல்வேறு பதவிகளுக்கான வேலைகள் கை நிறைய உள்ளன.

எண் 1: சாஃப்ட்வேர் என்ஜினீயர்ஸ்/சாஃப்ட்வேர் டெவலப்பர்ஸ்/புரோகிராமர்ஸ்

திறமை மற்றும் கவனம் மிகுந்த சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள் ஐடி துறைக்கு எப்போதுமே தேவையாக உள்ளனர். இந்தப் பணியாளர்களின் முக்கிய வேலை கம்ப்யூட்டர்களை திறம்பட கையாளுவது மற்றும் கம்பெனியின் இதர தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்புடையதாக இருக்கும்.

சாஃப்ட்வேர் டெவலப்மென்டில் இருந்து பராமரிப்பு வரை, ஒவ்வொன்றுமே இந்த என்ஜினீயர்களால்தான் செய்யப்படுகின்றன. இந்தத் துறைக்கு படித்து முடித்து புதிதாக வருபவர்களுக்கு இந்த துறை ஆண்டுக்கு ரூ.1.8 முதல் 2 லட்சம் வரையும், அனுபவம் வாய்ந்தவர்களுக்கு அவர்களின் அனுபவம் மற்றும் பதவியின் நிலைக்கு ஏற்ப ரூ. 2.4 லட்சம் முதல் 4.2 லட்சம் வரையிலும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தாராள ஊதியம் வழங்குகிறது.

எண் 2: டெலி காலர்ஸ் ( Tele callers)

ஐடி துறையில் டெலி காலர் பணியாளர்களுக்கு தொடர்ச்சியான தேவை இருந்து வருகிறது. விற்பனை சார்ந்ததாகவோ அல்லது வாடிக்கையாளர்களைக் கையாள்வதாகவோ எதுவாக இருந்தாலும், திறமையாகப் பேசுபவர்களை இந்தத் துறை எப்போதுமே தேடிக்கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் சரளமாக பேசுபவராகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட மொழியை பேசத் தெரிந்தவராகவும் இருந்தால், டெலி காலிங் ( tele -calling) அல்லது அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் ( inbound) அழைப்புகளுக்கு பதிலளிக்கும் வேலை உங்கள் திறமையை நிரூபிக்கக்கூடியதாக, குறிப்பாக பெங்களூரில் இருக்கும்போது, அமையும். ஆண்டு முழுவதும் பலதரப்பட்ட வேலைகள் உள்ளதால், உங்களைப் போன்றவர்களுக்கு இது எளிதான நல்ல வாய்ப்புகளாக இருக்கும். இந்தத் துறையில் படித்து முடித்துவிட்டு புதிதாக வருபவர்கள், ஆண்டுக்கு 96,000 முதல் 1.2 லட்சம் ரூபாய் வரையிலான ஊதியத்துடன் வரவேற்கப்படுகிறார்கள். அதுவே அனுபவம் வாய்ந்தவர்களுக்கு அவர்களின் பதவியைப் பொறுத்து ஆண்டுக்கு ரூ. 3.6 லட்சம் வரை அதிகரிக்கலாம்.

எண் 3: நர்சஸ்

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெங்களூருக்கு குடியேறுபவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவத் துறை அதிக திறமை மற்றும் கவனத்திறன் மிகுந்த பணியாளர்களுடன் தொடர்ந்து தன்னைத்தானே பலப்படுத்திக்கொள்ளவும், மேம்படுத்திக்கொள்ளவும் வேண்டியது உள்ளது. இது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிக நர்சுகளை பணிக்கு எடுக்க வழிவகுக்கிறது. மருத்துமனைகளைத் தாங்கிப்பிடிக்கும் தூண்களாக நர்சுகள் உள்ளனர். இந்த வேலைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால், ஹை ஸ்கூல் தேர்ச்சி சான்றிதழுடன், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் நர்சிங் படிப்பில் நீங்கள் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். நர்சுகளுக்கு எந்த இடமாக இருந்தாலும் ஆண்டுக்கு ரூ. 1 முதல் 3 லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

மார்க்கெட்டிங் மேனேஜர்கள், டெக்னிக்கல் பணியாளர்கள், சைட் சூப்பர்வைசர்கள், SAP கன்சல்டன்ட்ஸ், சேல்ஸ் என்ஜினீயர்ஸ் உள்ளிட்ட இதுபோன்ற ஏராளமான இதர வேலைகளுக்கும் அதிக தேவை உள்ளன.

Source: Jobtonic.in

எடிட்டர் சாய்ஸ்

MUST READ