Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய லோகோவுடன் கூகுள்!

டந்த பதினேழு வருடங்களாக பல்வேறு பரிணாமங்களைக் கண்டுள்ள கூகுள் நிறுவனம், இன்று தன்னுடைய புதிய லோகோவை வெளியிட்டுள்ளது



சரி...எதற்கு இந்த மாற்றம்?

முன்பெல்லாம் டெஸ்க்டாப் கணினி மூலம் மட்டுமே கூகுளைப் பயன்படுத்தமுடியும். ஆனால் இப்போது பல ஆப்ஸ் மற்றும் நவீன சாதனங்களில் உபயோகப்படுத்த முடிகிறது. இதன் புதிய சின்னம், மிகச் சிறிய ஸ்க்ரீனில் கூட கூகுள் இயங்கும் என்பதைக் காட்டுகிறது.  கூகுள் அனைத்து சேவைகளுக்கும் ஒரே லோகோவை பயன்படுத்துவதன் மூலம் இன்னும் எளிதாக பயன்படுத்த  முடியும். இது, நீங்கள் கூகுளைப் பயன்படுத்துவது மட்டும் அல்லாது கூகுள் உங்களுக்கு சேவை புரிகிறது என்பதையும் காட்டுகிறது.





உதாரணத்திற்கு, கூகுளின் வண்ணமயமான மைக் இன்னும் எளிதாக ஆடியோ வசதிகளை செய்து தரும். மேலும், பழைய சின்னத்தில் உள்ள சிறிய நீல நிற Gயை நீக்கிவிட்டு, நான்கு வண்ணங்களில் கலர்புல் G யை  அறிமுகப்படுத்துகிறோம். இந்த கலர்புல் மாற்றம் இன்றைக்கு மட்டும் அல்ல...எதிர்காலத்தையும்  காட்டுகிறது" என்கிறது கூகுள் நிறுவனம்!


தா. நந்திதா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close