Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறுதானிய உணவு படைக்கும் 'நிலாச்சோறு'!

த்தடிக்கு ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடை.. கலர் கலராய் உணவு வகை.. இன்றைய இளைஞர்களை கவர இன்னும் இத்யாதி, இத்யாதிகள். இதுதான் இன்றைய உணவு கலாச்சாரமாய் மாறிவிட்டிருக்கிறது. இருந்தாலும் ஆங்காங்கே புதிது புதிதாய் தோன்றும் இயற்கை உணவகங்களும் தனித்து தெரியவே செய்கின்றன.

கோபிச்செட்டிப்பாளையம் ஆர்ச் அருகில், 3 மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது, 'நிலாச்சோறு' உணவகம். முழுவதும் இயற்கையாய் விளைவிக்கப்பட்ட பொருட்களை கொண்டு உணவு தயாரிக்கப்படுவதுதான் இந்த உணவகத்தின் சிறப்பு என்கிறார் இதன் உரிமையாளர்.

கடையின் உரிமையாளர் விஜயசங்கரிடம் பேசினோம்.

“ நானும், நண்பர் யுவராஜும் ஒரு முறை இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை சந்தித்தோம். அவருடனான சந்திப்பு எங்களுக்கு இயற்கை விளைபொருட்கள் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு அது சார்ந்த ஏதாவது ஒரு தொழிலை தொடங்க முடிவு செய்தோம். அப்படி உருவானதுதான் இந்த உணவகம். ஆரம்பத்தில் இதற்கான பொருட்களை தேர்வு செய்து வாங்குவதில் சிரமம் இருந்தது. அரிசிக்காக கரூர் வரை போய் வந்தோம். இப்போது அந்த சிரமம் இல்லை. ஒரு சிலவற்றை நாங்களே உற்பத்தி செய்கிறோம்.

உணவு தயாரிப்பிற்கு செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணெய், கடலை எண்ணெயைதான் பயன்படுத்துகிறோம். அதேபோல் உடல் ஆரோக்கியத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் வெட்டிவேர் கலந்து கொடுக்கிறோம். மாலையில் நாட்டு சர்க்கரை கலந்த ஆவாரம்பூ தேநீர் கொடுப்போம். பணியாரத்தில் கூட வெரைட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறோம். கம்பு, சோளம், சிறுதானியம் முதலான வெரைட்டிகள் இருக்கிறது. இதில் இனிப்பு பணியாரத்திற்கு துளிகூட கெமிக்கல் கலக்காத நாட்டுச்சர்க்கரையைதான் பயன்படுத்துகிறோம்.

அதேபோல் இரவு டிபனில் இட்லியில் கூட பலவகை உண்டு. முடக்கத்தான், கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, சிறுதானியம், நவதானியம் என ஒரு நாளைக்கு ஒரு இட்லி தயாரித்துக்கொடுக்கிறோம்.

இதுமட்டுமின்றி எங்களால் தயாரிக்கப்பட்ட வாழைத்தண்டு மிட்டாய், தேன்நெல்லி, சின்ன வெங்காய தொக்கு ஆகியவையும் எங்களது உணவகத்திலும் கிடைக்கும். வாயு தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இஞ்சி முரப்பா கொடுக்கிறோம். இயற்கையாய் விளைவிக்கப்பட்ட ஆப்பிளை உத்தரகாண்டிலிருந்து வரவழைத்து ஜூஸ் செய்து கொடுக்கிறோம். இப்படி நாங்கள் கொடுக்கும் உணவுகளிலும் பெரும்பாலும் மருத்துவ குணம் இருக்கும்படி தயாரிக்கிறோம்” என்கிறார்.

உணவகத்தினுள் என்னென்ன உணவுப்பொருட்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதையும் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளும் வண்ணம் எழுதி வைத்திருக்கிறார்கள்  உணவகத்தில் இளைஞர்கள் கூட்டத்தையே அதிகம் காணமுடிந்தது" என்றார்.

இயற்கை விவசாயம், சிறுதானியங்களின் மீதான கவனம் இளைஞர்களிடையே உருவாகியிருக்கிறது வரவேற்கத்தக்கது!

- வீ.மாணிக்கவாசகம்
 படங்கள்;
ரமேஷ் கந்தசாமி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close