Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேத்திக்கு தாயான பாட்டி..!

நான்கு வாரங்கள் கடந்து விட்டன, மீலா ஆரோக்கியமாக பிறந்து. மீலாவின் தாய் மேண்டி ஸ்டீஃபன்ஸ், சில மாதங்களுக்கு முன் செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற முடிவு செய்த போது, அக்குழந்தைக்கு வாடகைத் தாயாக முன்வந்தார் மேண்டியின் தாய் ஷெர்ரி டிக்சன்.

51 வயதான ஷெர்ரி, தன்னுடைய மகள் முதல் பிரசவத்தின் போது, குறைபிரசவத்தால் குழந்தையை இழந்து தவித்ததை கண்டு மனமுடைந்து போனார்.

இரண்டாவது பிரசவத்தின் போதும், குறைபிரசவமாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூற, வாடகைத் தாயை தேடி அலைந்த மேண்டிக்கு, மருத்துவர்கள் பரிந்துரைத்தது, அவரின் சொந்தத் தாயான ஷெர்ரியை. இதற்கு ஷெர்ரியும் சம்மதிக்க, குறுக்கே நின்றது, மல்டிபிள் ஸ்க்லீராசிஸ் எனும் நோய். இந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஷெர்ரி, கருவை சுமக்கும் போது, மாத்திரைகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனால் ஆச்சரியமான செய்தி என்னவெனில், கருவை சுமந்திருந்த வேளையில், மல்டிபில் ஸ்க்லீராசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஷெர்ரி, அந்நோயிலிருந்து விடுபட்டார். கடந்த ஜூலை 31 ஆம் தேதி மீலாவை பெற்றெடுத்தார், அவளின் பாட்டியான ஷெர்ரி.

“வயிற்றில் கருவை சுமப்பது எளிதான் ஒன்றுதான். அது எனக்கு மிகவும் பிடிக்கும். இதை என் மகளுக்காக செய்தேன்” என சாதாரணமாகக் கூறுகிறார் ஷெர்ரி.

“நாங்கள் முதலில் குழந்தையை தத்தெடுக்கும் முடிவில்தான் இருந்தோம். ஆனால் வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்ற தாய்மார்களை பற்றி படித்தபின், இந்த முடிவுக்கு வந்தோம்” என்கிறார் மேண்டி. பல மருத்துவர்களை அணுகி, பல்வேறு சோதனைகளுக்கு பின், மேண்டியின் குழந்தைக்கு வாடகைத்தாயாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஷெர்ரி.

“குழந்தை பிறந்தவுடன், ஆனந்தத்தில் நான் மேலும், கீழும் குதித்தேன். நாங்கள் ஒருவரை ஒருவர் தழுவி, எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம். நாங்கள் அவளின் மேல் அளவு கடந்த பாசத்தை கொண்டுள்ளோம். அவள் எங்கள் குடும்பத்திற்கு கடவுள் கொடுத்த வரம்” என தான் தாயான சந்தோஷத்தை பகிர்கிறார் மேண்டி.

மீலா என்றால் அற்புதம் என்று அர்த்தமாம். தன்னுடைய முதல் குழந்தைக்கு தியோ ஜேம்ஸ் எனப் பெயரிட்ட மேண்டி, அண்ணனின் நினைவாக, மீலாவுக்கு, 'மீலா ஜேம்ஸ் ஸ்டீஃபன்ஸ்' எனும் பெயரை சூட்டியுள்ளார். குழந்தையை பெற்றெடுத்தது மட்டுமில்லாமல், நோயிலிருந்தும் விடுபட்டுள்ளார் ஷெர்ரி.

பிரசவ காலத்தில், நோய் எதிர்ப்பு அமைப்பினில் ஏற்படும் மாற்றங்களினால், மல்டிபில் ஸ்க்லீராசிஸ் நோயானது குணமடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இரு தாய்களின் தோள்களில், தினமும் ஆனந்த துயில் கொள்கிறாள் மீலா.  

ஜெ. விக்னேஷ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close