Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இதயம் பேசு(கதறு)கிறது...ஏன்? உஷார் ( வீடியோ)

புகைப்பிடிப்பதினால் ஏற்படும் தீங்குகளை விளக்கியும், புகைப்பழக்கத்தை கைவிட கோரியும் திரையங்குகளில் வெளியான "நான்தான்  முகேஷ்...!"  என்ற மத்திய அரசின்  விளம்பர படம் ஏக பிரசித்தம்.

அதேப்போன்று இதே கருத்தை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதாரத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 'புகைப்பழக்கத்தை கைவிடுங்கள்!' என்ற விளம்பர படமும், தமிழக திரையங்குகளில் அவ்வப்போது பிரதான திரைப்படம் தொடங்குவதற்கு முன்னர் திரையிடப்பட்டன.

புகை பழக்கம் உள்ளவர்களது இருதயம், அவர்கள் புகைக்கும்போது எவ்வாறு பாதிப்புக்குள்ளாகிறது என்பதை, "டேய் வேண்டான்டா....என்னால தாங்க முடியலடா...விட்டுடா..!" என  இருதயமே பேசுவது ( கதறுவது)  போல எடுக்கப்பட்டிருக்கும் அந்த படம் பார்ப்பவர்களை சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைக்கும்.

இந்த வீடியோவை யூ டியூப்பில் தேடியபோது, அதை பார்த்தவர்களின் எண்ணிக்கையை கண்டபோது அதிர்ச்சியும், வேதனையுமாக இருந்தது. ஒரு மொக்கை படத்திற்கான டீசர் ஹிட்டடித்த அளவுக்கு இல்லை என்றாலும் கூட, ஒரு நல்ல மெசேஜ், அதுவும் நல்ல ரசிக்கும்படியான பின்னணி குரலுடன் எடுக்கப்பட்ட இந்த விளம்பர படம் யூ டியூப்பில் கணிசமான பார்வையாளர்களின் எண்ணிக்கையை கூட பெறாமல் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களை மட்டுமே கொண்டிருக்கிறது.

பழைய வீடியோவானாலும், எப்பொழுதுமே பார்க்ககூடிய அந்த வீடியோ இங்கே...

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ