Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிகரெட் குப்பைகளை தடுக்க லண்டன் மாநகராட்சியின் அட்டகாச ஐடியா!

சிகரெட் குடித்துவிட்டு கண்டபடி ரோட்டில் வீசுவதை தடுக்க, லண்டன் மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தது. எந்த நடவடிக்கைக்கும் புகைப்பவர்கள் மசியவில்லை. ரோட்டில் சிகரெட் துண்டுகள் வீசப்படுவதை  தடுக்க முடியவில்லை.

லண்டன் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் கால்பந்து ரசிகர்கள். இதனால் கால்பந்தை மையமாக வைத்து ஏதாவது செய்தால்தான் சிகரெட் குப்பைகளை தடுக்க முடியும் என்று ஆலோசித்தது மாநகராட்சி நிர்வாகம். அந்த கண நேரத்தில் உதித்ததுதான் இந்த ஐடியா.

அதாவது லண்டன் நகரத் தெருக்களில், முக்கியமாக பாதாள ரயில் நிலையங்களின் அருகில், சிறந்த கால்பந்து வீரர் ரொனால்டோவா? மெஸ்சியா? என்று எழுதி, இரு குப்பை டப்பாக்களை வைத்தது. யார் சிறந்தவர்? உங்கள் சிகரெட் துண்டுகளை கொண்டு ஓட்டளியுங்கள் என்றும் பிரசாரம் செய்தது. இந்த ஐடியா நல்ல பலனளித்தது.

தற்போது சிகரெட் குடிப்பவர்கள் மிச்சத்தை தெருவில் வீசுவதில்லை. மாறாக குப்பை டப்பாக்களில் ரொனால்டோவா? மெஸ்சியா? என்று ஓட்டளித்து வருகிறார்கள். ரொனால்டோ, மெஸ்சியால்  லண்டன் தெருக்களில் தற்போது சிகரெட் துண்டுகளை காண முடிவதில்லையாம்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ