Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகம் வியந்த சீன ராணுவத்தின் பிரம்மாண்ட அணிவகுப்பு! (வீடியோ)

ரண்டாம் உலகப்போரில் சீனா,  ஜப்பானை வென்றதின் 70 ஆம் ஆண்டு விழா, நேற்று (வியாழன்) சீனாவின் தியான்மென் சதுக்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது சீன ராணுவம் நடத்திய பிரம்மாண்ட அணிவகுப்பு காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

துப்பாக்கி ஏந்திய 12 ஆயிரம் வீரர்கள், நூற்றுக்கணக்கில் பீரங்கிகள், கவச வாகனங்கள், சிறிய மற்றும் பெரிய ஏவுகணைகள்,போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என்று நடந்த அணிவகுப்பு,  மக்களை வெகுவாகக் கவர்ந்தது. வானில் பலவண்ண பொடிகளைத்  தூவிய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானத்தையே வண்ணமயமாக்கின.

ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் நடந்த இந்த பிரம்மாண்ட அணிவகுப்பின் முடிவில், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான புறாக்கள், வண்ண வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

இந்த நிகழ்வில் சீன அதிபர்  ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஐ.நா.பொதுச் செயலாளர் பான்கிமூன் உள்ளிட்ட தலைவர்களும்,மூத்த ராணுவ வீரர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்த அணிவகுப்பின் வீடியோ காட்சி யூ டியூப்  தளத்தில் வெளியிடப்பட்டு, ஒரே நாளில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

அந்த வீடியோ இங்கே.... 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close